மோக்ஷம் தரும் சப்தபுரிகளில், பூரி ஒன்றாகக் கருதப்படமாட்டாது. அயோத்யா, மதுரா, ஹரித்வார், வாரணாசி, துவாரகா, காஞ்சி, உஜ்ஜயினி என்பவைதான் ஏழு மோக்ஷ ஸ்தலங்கள். ஆனாலும் பூரி மிகப்புராதன ஸ்தலமாகும். அதனால்தான் “புர்” (புராதன) என்பதைக் குறிக்கும் பூரி எனப்பெயர் பெற்றது. இது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் “பூரி” என்று குறிப்பிடப் பட்டாதாக கூறினாலும் அது சர்ச்சைக்குரியதானது. ஆனால் 7ஆம் நூற்றாண்டு முதல் புராணங்களில் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
“சார்தாம்” (chardham) என்பவைகளில் பத்ரிநாத், த்வாரகா, ராமேஸ்வரம் இவையுடன் பூரியும் ஒன்று ஆகும். ஒவ்வொரு ஊரும் ஒரு யுகத்தை குறிப்பதாகும் — பூரி தற்போது நடக்கும் கலியுகத்தை குறிக்கிறது. சார்தாம் எனும் நான்கு ஊர்களிலும் ஆதி சங்கரர், மடங்களை நிறுவினார்.
பூரி சக்திபீடங்களிலும் ஒன்றாகும். ஜகன்னாதர் கோவிலில் விமலாதேவியின் சன்னதியும் உள்ளது. இது இக்கோவிலின் தாந்த்ரீக வரலாறாக நம்பப்படுகிறது. தீவிர வைஷ்ணவ ஸ்தலமாக இருப்பினும் இங்கு விமலாதேவிக்கு துர்கா பூஜையன்று ஆடுபலி கொடுக்கப்படுகிறது.
பூரி ஒரு சைவ க்ஷேத்ரமும் கூட — ஆனால் ஜ்யோதிர் லிங்கமாக கருதப்படவில்லை. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள லோகநாதர் கோவில் மிக பிரசித்தி பெற்றதாகும். இங்கு சிவலிங்கம் எப்பொழுதும் தண்ணீருக்கடியிலேயே இருக்கிறது. சிவராத்திரி தினத்தன்று மட்டும் மக்கள் தரிசனத்திற்காக, தண்ணீர் வடிக்கப்படுகிறது.
இங்கேயுள்ள பூரி ஜகன்னாதர் கோவிலின் படம் வில்லியம் ஹென்றி கார்னிஷ் (William Henry Cornish) என்பவரால் 1868-ல் எடுக்கப்பட்டது.
ஆதாரம்: ஜே.ஹெச். தவே-யின் “அமர இந்தியா” என்ற புத்தகம், 1957 (Immortal India, by J.H. Dave, 1957)