பிரஹதாரண்யக உபநிஷதம் அல்லது “மாபெரும் காட்டில் நடைபெற்ற போதனை” என்பது சுக்ல யஜுர்வேத பகுதியாகும். இது மிகப் பெரியதும், பழமையானதும் ஆன உபநிஷத்தாகும்.
இதில் உபநிஷத்காலத்தின் மாபெரும் முனிவர் யாஜ்ஞவல்க்யர் மற்றும் பலரின் உரையாடல்கள் இடம் பெறுகின்றன; இதில் புகழ்பெற்ற பெண் பண்டிதர்கள் கார்கி மற்றும் மைத்ரேயியும் பங்கு பெறுகின்றனர். இந்த பெண்கள் நினைவாக தில்லி பல் கலை கழகத்தில் இரண்டு கல்லூரிகள் பெயரிடப்பட்டுள்ளன.
பழமையான உபநிஷதமாக இருப்பதால், இதில் பிறகு விரிவாக விவாதிக்கப்பட்ட பல தத்துவக் கருத்துகளின் தொடக்கம் காணப்படுகிறது, உதாரணமாக, பல்வேறு நிலைமைகளில் உள்ள விழிப்புணர்வு, ஓம் என்னும் பிரம்ம சப்தத்தின் முக்கியத்துவம் ஆகியவை இதில் அடங்கும். மேலும் இதில் பிரபலமான சாந்தி மந்திரமான “அசதோ மா சத்கமய…” உள்ளது, அதாவது:
“அசதோ மா சத்கமய (உண்மை அற்றதில் இருந்து மெய்க்கு வழிகாட்டுதல்)
தமஸோ மா ஜ்யோதிர்கமய (இருளிலிருந்து ஒளிக்கு வழிகாட்டுதல்)
மிரித்யோர்மா அமிர்தம் கமய (மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கு வழிகாட்டுதல்),
ஓம் சாந்தி சாந்தி சாந்தி” என்ற மந்திரமும் அடங்கும்
இதில் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” எனும் மகாவாக்கியமும் இடம் பெற்றுள்ளது.
இது அளிக்கும் மிக முக்கியமான தத்துவக் கருத்து ‘நேதி நேதி’ (இது அல்ல, அது அல்ல) என்ற தத்துவமும் அடங்கும்.
சுவாமி
விவேகானந்தர் இதைப் பற்றி
“நாம் சில நேரங்களில் ஒரு பொருளை அதன் சுற்றியுள்ளவற்றின் வழியாக விவரிக்க முயல்கிறோம். ‘சச்சிதானந்தம்’ (இருப்பு – அறிவு – ஆனந்தம்) என்பதன் மூலம், விவரிக்க முடியாத ஒன்றின் எல்லைகளை மட்டும் குறிப்பிடுகிறோம். எவ்விதக் கற்பனையும், எண்ணங்களும் வீண் முயற்சியே. நெதி, நெதி (இது அல்ல, அது அல்ல) என்பதே கூறப்படக்கூடிய ஒன்றாகும், ஏனெனில் நமது சிந்திப்பிலேயே ஒரு எல்லை வரையப்படுகிறது, அதுவே அது இழப்பதற்கும் காரணமாகிறது.”
என்று கூறினார்
மூலம்: Vivekavani.com
படம்: neevselfinquiry.in – இதில் கார்கி ராஜரிஷி ராஜா ஜனகனின் முன்னிலையில் ரிஷி யாஜ்ஞவல்க்யருடன் விவாதிக்கின்றார் என்று காட்டப்படுகிறது