28

பரம் வீர் சக்ரா வினாடி வினா

போர்கள், வீரமிக்க படைவீரர்களாலேயே வெல்லப்படுகின்றன. போரில் திட்டமிடல் என்பது முதல் குண்டு சத்தம் கேட்கும் வரைதான். பல தடைகளை உடைத்தெறிந்து துணிச்சலுடன் நம் வீரர்கள் போராடியதற்கு கார்கில் போர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கார்கில் தினமான இன்று, இந்தியாவின் மிக உயரிய பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் கதைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இது முப்படை வீரர்களின் வீரதீர செயல்களுக்கான மிக உயர்ந்த விருது. சுதந்திரத்திற்குப் பிறகு 21 நபர்கள் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர், அவர்களில் 7 பேர் மட்டுமே இந்த விருதைப் பெறும்போது உயிருடன் இருந்தனர்.
இந்த விருதை முதலில் பெற்றவர் யார், இளையவர் யார், நடுவானில் இறந்தவர் யார், யாருக்காகவும் இல்லாமல் இறந்தவர் யார், மற்றொரு நாட்டிற்காக இறந்தவர் யார்?
இந்த 12 கேள்விகள் கொண்ட வினாடி வினாவிலிருந்து நம் வீர சிங்கங்களை பற்றி அறிந்துகொள்ளலாம். .
இந்த வினாடி வினாவிற்கான தகவல்கள், இயன் கார்டோசோவின் “பரம வீர், போரில் நமது ஹீரோக்கள்” என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.

1947 காஷ்மீர் போரில், ஒரு முக்கியமான இடத்தில் இருந்து படையெடுப்பாளர்களைத் தடுத்ததற்காக முதல் பரம் வீர் சக்ரா விருது, மேஜர் சோம்நாத்துக்கு வழங்கப்பட்டது. அவரால் எந்த பகுதி காப்பாற்றப்பட்டது?

கார்கில் போரில், கேப்டன் விக்ரம் பத்ரா ஒரு பிரபலமான முழக்கத்துடன் மக்களின் இதயங்களைக் கவர்ந்தார். முக்கியமான மலை உச்சியில் இருந்து எதிரிகளை அவர் அழித்த பிறகு எழுப்பிய முழக்கம் இது. ஆனால் சில நாட்களுக்குள்ளாகவே அவர் மற்றொரு போரில் வீரமரணம் அடைந்தார். அவர் எழுப்பிய முழக்கம் என்ன?

கி.மு 2 ஆம் நூற்றாண்டு சங்க இலக்கியங்கள், வீரதீரர்களுக்கான நினைவுச்சின்னங்களை பற்றி குறிப்பிடுகின்றன. இந்த நினைவுச்சின்னங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

1947ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான இந்தியாவின் முதல் போரில் போராடிய நமது ஐந்து வீரமிக்க படைவீரர்களுக்கு உடனடியாக பரம் வீர் சக்ரா (PVC) வழங்க முடியவில்லை. அது பின்னர்தான் வழங்கப்பட்டன. அந்த விருதுகள் எப்போது அறிவிக்கப்பட்டன?

பரம் வீர் சக்ராவிற்கு சுவிட்ஜ்ர்லாந்து  நாட்டுடன் தொடர்பு உள்ளது. அது என்ன?

பரம வீர சக்ர பதக்கத்தில் ரிக் வேத ஆயுதமான (அஸ்திரம்) பொறிக்கப்பட்டுள்ளது. அது எந்த அஸ்திரம்?

நிர்மல் ஜித் சிங் செகோனுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவர் ஆற்றிய வீரதீரச்செயல் எங்கே நடந்தது ?

கார்கில் போரில் கையெறி குண்டு வீசும் வீரர் யோகேந்திர சிங் யாதவுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. கார்கில் போர் என்றாலே நினைவிற்கு வரக்கூடிய பகுதியில் அவர் போராடினார். அது எந்த இடம்?

டிசம்பர் 05, 1961 அன்று, ஒரு சர்வதேச அமைப்பிற்காக துணிச்சலுடன் செயல்பட்டதற்காக கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அது எந்த சர்வதேச அமைப்பு?

சத்தமில்லாமல் தற்போதும் நடந்து கொண்டிருக்கிற ஒரு சண்டையின் வெற்றிகரமான ஆரம்பம்தான், ‘ஆபரேஷன் மேக்தூத்’ இந்த போர்க்களத்தில் நைப் சுபேதர் பானா சிங்கிற்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. எந்த போர்க்களம்?

பரம் வீர் சக்ரா விருது பெற்ற இந்த விருதாளர், வேறொரு நாட்டில் போராடி இறந்தார். அவர் போராடிய இடம் எந்த நாடு?

சுற்றிலும் ஆள் அரவம் இல்லாத ஒரு படைத்தளத்தை தக்கவைத்துக்கொள்ள, மேஜர் ஷைத்தான் சிங் மிக துணிச்சலாக வழிநடத்திச்சென்ற ஒரு சண்டையில், 114 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சண்டை நடந்த இடம் எது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In