அதிதி என்றால் எல்லையற்றது என பொருள். “அ” என்பது ஒன்றுமில்லாத வெறுமை என்பதையும் “திதி” என்பது பிணைப்பது அல்லது கட்டுவதையும் குறிப்பனவாகும். ரிக் வேதத்தில் அதிதி என்பது அந்தம் அல்லது முடிவே இல்லாத படைப்பைக் குறிக்கும். அதிதி மிக முக்கியமான தெய்வமாகப் போற்றப்படுகிறார். மக்கள் தங்கள் பாவங்களையும் பிணிகளையும் தீர்த்து வைக்குமாறு வேத மந்திரங்கள், ப்ரார்த்தனைகள் மூலமாகவும் இத்தெய்வத்தையே வழிபாடு செய்து துதிக்கின்றனர். புராணங்களில் இவரே தெய்வத்தாயாக குறிப்பிடப்படுகிறார். இவர் தக்ஷன் மற்றும் ப்ரஜாபதி ஆகியோரின் புதல்வியும், காஸ்யப முனிவரின் பத்தினியுமாவார். இவர் 12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள், அக்னி, இந்திரன் ஆகிய முப்பத்து மூவரையும் ஈன்றெடுத்தவரும் வாமனராக அவதாரமெடுத்த விஷ்ணுவின் அன்னையுமாவார்.
இவரது சகோதரி திதி சக்தி வாய்ந்த குழந்தை பெறுவதற்கு வேண்டியதன் பலனாக கருவுற்றாள். ஆனால் அவள் மீது கொண்ட பொறாமையினால் இந்திரன் திதியின் கருவை இடி, மழை போன்ற 49 உயிரற்ற அங்கங்களாக சிதைத்து விட்டார். இதனால் வெகுண்ட திதி சகோதரி அதிதிக்கு “குழந்தைகளைப் பறி கொடுத்து துயருறும் தாயாவாய்” என சபித்தார். அந்த சாபத்தின் பலனாகவே அதிதி கிருஷ்ணரின் அன்னை தேவகியாகப் பிறந்து தனது முதல் ஏழு குழந்தைகளையும், கம்ஸனிடம் பறி கொடுத்து அல்லலுற்றாள்.