106

ஜன்மாஷ்டமி விநாடி வினா

இந்த வருடம் 2025 இல் நம் இந்திய சுதந்திர தினமும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி யும் அடுத்தடுத்த நாட்களில் வருவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது தெரியுமா?

நம் நாகரீகமும் தர்மமும் ஒரு புது எழுச்சியை உண்டாக்குவதற்குரிய அறிகுறிகள்
நிரம்பி இருப்பதை காணலாம். இந்த வினாடிவினா கூட பாரம்பரியம், தர்மத்தை நவீனமுறையில் அந்த மக்களுக்கு எடுத்துச்செல்ல அருமையான முறை.

கண்ணனின் கீதை , நம் நாட்டின் தேசிய இயக்கங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது
என்பதை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா??? ஆம் நம் நாட்டுத் தலைவர்களும்
சான்றோர்கள் பலரும் கிருஷ்ணனின் லீலைகள் மற்றும் உபதேசங்களால் பெரும்
தாக்கத்துக்கு உள்ளானார்கள். கண்ணனின் ஒவ்வொரு விளையாட்டும் மிக உன்னதமான
தர்மங்களை நிலைநாட்டுவதாக இருப்பதை நாமெல்லாம் அறிவோம். அந்த
தீராதவிளையாட்டுபிள்ளையின் அறிவுரைகள் நம்தேசத்தலைவர்கள் பலரை விடுதலை
இயக்கத்தில் ஈடுபடுத்தி மேலும் அவர்கள் பயணத்திற்கு வழிகாட்டும் கலங்கரை
விளக்காக அமைந்தது என்றால் மிகையாகாது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி நிறைந்த சுதந்திர தினம், மற்றும் ஆனந்தமான கண்ணன்
ஜெயந்தி வாழ்த்துக்கள்

இவர் நம் தேசியப்பாடலை இயற்றியவர். பல உன்னத படைப்புகள் அளித்த நாவலாசிரியர். க்ருஷ்ண சரித்ரா இவர் எழுதிய நூலாகும்..யாரென்று தெரிகிறதா??

இந்த புரட்சியாளர் சிறையில் இருந்த போது க்ருஷ்ணானுபாவம் பெற்றதனால் இந்தியாவின் மிகப்பெரிய தத்துவஞானியாக மாறினார்..இவர் யாரென்று சொல்லுங்கள்

கண்ணனின் கீதை குக்ஷேத்ர போர்களத்தில் அர்ஜுனனுக்கு
அளிக்கப்பட்டது என நாம் அறிவோம். மஹாத்மா காந்தி தன் அஹிம்சைக் கொள்கையுடன் இந்த மகாபாரத யுத்தத்தை எப்படி ஒப்பிட்டுப்பார்க்கிறார்?

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்,
மிக எளிமையான நடையில் ராமாயணம் மகாபாரதம் போன்ற புராண கதைகளை
தந்துள்ளார். அவர் கீதையைப் பற்றியும்
ஒரு விளக்கம் உரை தந்துள்ளார்…யார் அந்தப் பெரியவர்?

மராத்தியை தாய்மொழியாக் கொண்ட
ஒரு கணபதி உபாசகர், ஸமஸ்க்ருத
பண்டிதர், கீதைக்கு மிக ஆழமான விளக்க உரை
தந்துள்ளார்.இவர் யார்?

லாலா லஜ்பத்ராய், இந்துக்களல்லாத மற்ற மதத்தினரிடையே கீதையை பற்றி பல சந்தேகங்கள் நிலவியதை சீர் செய்யும் நோக்கத்தில் பகவத் கீதையைப் பற்றி
எந்த மொழியில் விளக்கம் எழுதினார்?

க்ருஷ்ணனை விரும்பிய மௌலானா என அறியப்பட்ட ஹஸ்ரத் மோஹனி எந்த கோஷத்தை பிரபலமக்கினார்?

சுதந்திர இந்தியாவில் face of socialism…
……ஒரு நாத்திகர் ஆயினும் “ராமர் கிருஷ்ணர் சிவன் – இவர்கள் இந்தியர்களின் மூன்று பிர்ஹ்மாண்ட கனவு” என்று சொன்ன இவர் யார்?

சுவாமி விவேகானந்தர் கவனிப்பில் கீதா வை வலது இடதாகப்படித்தால் தா..கி ஆகும்..இதற்கு ஒரு மகத்துவம் மனித வாழ்க்கையில் இருப்பதாகக் கூறினார் ..அதற்கு என்ன அர்த்தம்.????

18 வயதில் கையில் பகவத் கீதை புத்தகத்தை துணையாக எடுத்துக்கொண்டு தூக்கு மேடை
மேடை ஏறிய வீரன் போராளி யார்?

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மிக அதிகமாக கல்வியில் செல்வாக்கு பெற்ற ,கீதையின் விளக்க உரை எழுதிய இந்தியபேராசிரியர் யார?

இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவின் சுயாட்சிக்கு வக்கீலாக இருந்தவர்,
“கீதையில் இருக்கும் சூக்ஷ்ம (ரகசிய)
விஷயத்தை, அறிவுரையை நாம் இன்னும் வெளியில் கொண்டுவரவேண்டும்” என்றார். அவர் யார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In