அருட்தொண்டர்கள் (‘sant parampara’ — tradition of saints) பரம்பரையில் தோன்றியவர்களுள் ஸமர்த் ராமதாஸ் (Samarth Ramdas) (1608-81) மிக முக்கியமானவர். இவர் சிவாஜி மாகாராஜாவுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தவர் என்று சொல்லப் படுகிறது. இவர் எழுதிய மிகப் பிரபல பஜனைப் பாடலின் முதல் இரண்டு வரிகள் —
சுக்-கர்த்தா துக்-ஹர்த்தா வார்த்தா விக்னாச்சி |
நூர்வி பூர்வி ப்ரேம் க்ருபா ஜெயாச்சி ||
( Sukhkarta Dukhharta Varta Vighnachi || Nurvi Purvi Prem Krupa Jayachi || )
இதன் பொருள் —
வாழ்வில் “விக்னம்” என்னும் தடைகளையும் இடர்களையும் நீக்கி சுகமும் சந்தோஷமும் தரும் கடவுளே. கருணையெனும் அன்பைப் பொழிபவனே !!
என்று தொடங்கி,
“சங்கதி பாவாவே நிர்வாணி ரக்ஷாவே சுர்வர்வவந்தனா”
( Sankati Pavave Nirvani Rakshave Survarvandana || )
பொருள் —
இடர் காலங்களில் எங்களை காத்தருள துதிக்கின்றோமே
என்ற மன்றாட்டத்துடன் முடிகின்றது. இந்த பஜனைப் பாடலுக்கு நடுவில் அவ்வப்போது மிக பரிச்சயமான, “ஜயதேவ் ஜயதேவ் ஜெய மங்கள மூர்த்தி ||” என்ற வரிகள் வருகிறது.
இதன் பொருள் —
கடவுளை போற்றுவோம், கடவுளைப் போற்றுவோம், உன் மங்களகரமான உருவத்தை போற்றுவோம்.
இது நம் “விநாயகனே வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞால முதல்வனே” என்ற தமிழ்பாடலைப் போல எங்கேயும் எப்போதும், எல்லோராலும் பாடப்படுகிறது.
17ம் நூற்றாண்டின் ஸமர்த் ராமதாசருடைய இந்த நிழற்படம், விக்கிமீடியாவிலிருந்து (Wikimedia) பெறப்பட்டது.
ஆதாரம்: https://kedar.nitty-witty.com/blog/ganapati-aarti-sukhkarta-dukhharta-with-english-translation-free-download-mp3.