164

வாமனன் மற்றும் பலிச்சக்கரவர்த்தி பற்றிய வினாடி-வினா

ஓணம், கேரளாவில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் மிக பிரபலமான பண்டிகை. இப்பண்டிகையின் மூலம் விஷ்ணுவின் வாமன அவதாரமாகும். விஷ்ணுவின் மனித மிருக அவதாரங்களில் மிகத் தனித்துவமானதாகும். மிகப் பிரசித்தி பெற்ற விஷ்ணுவின் பழைமையான இந்த அவதாரம், ஆயுதங்களின்றி தர்மத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப் பட்டது. இந்த அவதாரத்தின் விவரம் மகாபாரதம், மகாபாஷ்யம் மற்றும் புத்த மத கதைகளிலும் இடம்பெற்று உள்ளது. வாமனன் மற்றும் “மஹாபலி” என்றறியப்படும் பலிச்சக்கரவர்த்தி பற்றிய 12 சுவாரசியமான செய்திகளை இந்த கேள்வித் தொகுப்பில் பார்ப்போம். ‘பலிச்சக்கரவர்த்தியின் முன்னோர் யார்?’, ‘அவர் விஷ்ணு வால் ஏமாற்றப்பட்டாரா அல்லது அறிந்தே அனைத்தையும் விஷ்ணுவிற்கு கொடுத்தாரா?’, ‘கிருஷ்ணனுக்கும் பலிச்சக்கரவர்த்திக்கும் உள்ள தொடர்பு என்ன?’ போன்ற விஷயங்களைப் பற்றி அறிவோம். இந்த கேள்வித் தொகுப்பு, குறிப்பிடபடாவிடின், பெரும்பாலும் வாமன புராணத்தை ஆதாரமாக கொண்டுள்ளது. 5 அதிர்ஷ்டசாலிகள் பிபேக் டெபராயின் ‘பகவத் கீதா’ புத்தகத்தை பரிசாகப் பெறுவார்கள்.

பலிச் சக்ரவர்த்தியின் முன்னோர் (பாட்டனார்) யார்?

வாமன அவதாரத்தின் முக்கிய சாராம்சம் எந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

பலிச்சக்கரவர்த்தி அசுரனாக இருந்தாலும் அவனது நாட்டில் நுழைந்தது யார்?

வாமனன் கஷ்யப முனிவர் மற்றும் அதிதி இருவருக்கும் பிறந்தார். அவர்களுக்குப் பிறந்த மற்றொரு புதல்வர் யார்?

பலிச்சக்கரவர்த்தியின் குரு, பலியிடம், விஷ்ணு பகவானுக்கு எதையும் தர வேண்டாமென அறிவுறுத்துகிறார். அந்த குரு யார்?

வாமனனுக்கு என்ன வேண்டுமென்று கேட்கும் பொழுது பலிச்சக்கரவர்த்தியின் மனநிலை என்ன?

வாமனன் தனது உருவத்தை வளர்த்து பெரிய அடிகளால் உலகளந்த அந்த வடிவத்தின் பெயர் என்ன?

வாமனன், பூமி மற்றும் வானத்தை இரண்டு அடிகளால் அளந்த பிறகு மூன்றாவது அடி வைப்பதற்கு இடத்தைக் கேட்கிறான். அப்பொழுது பலிச்சக்கரவர்த்தியின் மகன் பானாசுரன், வாமனனிடம் என்ன கேட்கிறான்?

விஷ்ணு மூன்று அடிகளால் அளந்த பிறகு, பலிச்சக்கரவர்த்திக்கு என்ன வழங்குகிறார்?

வாமன அவதாரத்தில் குருக்ஷேத்ரத்திற்கு ஒரு முக்கியமான இடமுண்டு. இங்கு எந்த நிகழ்ச்சி நடைபெற்றது?

பாரதத்தின் ஒரு பெரிய பண்டிகைக்கு மறுநாள் பலிச்சக்கரவர்த்தி கொண்டாடப்படுகிறார். அப்பண்டிகை எது?

புத்த கலாசாரத்திலும் பலிச்சக்கரவர்த்தியின் கதை உள்ளது. அவன் ஞானமுள்ளவன் ஆக மாறுவான் என்று கூறப்பட்டுள்ளது. புத்த கலாசாரம் பலியை எப்படிப்பட்டவனாக காண்பிக்கிறது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In