நரகாசுரனின் சாம்ராஜ்யமத்தை பிராக்ஜ்யோதிஷ்புரம் என்று மகாபாரதம் வருணிக்கின்றது [பிராக் என்றால் கிழக்கு + ஜ்யோதிஷ் என்றால் ஒளிர்தல் (கற்றல்) + புரம் என்றால் நகரம்]. சில அறிஞர்கள் இந்த நகரம் வடமேற்கு இந்தியாவில் உள்ளது என்று குறிப்பிட்டாலும், “ராஜதரங்கிணி” எனும் காஷ்மீரைப் பற்றிய அதிகாரபூர்வ வரலாற்றில், பிராக்ஜ்யோதிஷ்புரம் அஸ்ஸாமில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது!
அஸ்ஸாமில் கி.பி. 13ம் நூற்றாண்டின் அஹோம் (Ahom) பேரரசுக்கு முந்தய மூன்று சாம்ராஜ்யங்களான வர்மன்கள் (Varman, கி.பி. 350-650), மிலேச்சர்கள் அல்லது சாலஸ்தம்பர்கள் (Mlecchas or Salastambhas கி.பி. 655-900) மற்றும் பாலர்கள் (Palas, கி.பி. 900–1100) தங்களை நரகாசுரனின் வழித்தோன்றல்களாக கூறிக்கொண்டனர். அதன்பிறகு கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் அஹோம்கள் ஆட்சி செய்ததால் அந்த இடத்திற்கு அஸ்ஸாம் என்ற பெயர் வந்தது. புராணங்களிலும் அர்த்தசாஸ்திரத்திலும் அஸ்ஸாம் “காமரூபம்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராக்ஜ்யோதிஷ்புரம் வர்மன்களின் தலைநகராக நம்பப்பட்டாலும் அது நிரூபிக்கப்படவில்லை. காலப்போக்கில், பிராக்ஜ்யோதிஷ்புரம், காமரூபம், அஸ்ஸாம் எல்லாம் ஒரே இடத்தை குறிப்பவையாக மாறிவிட்டன.
ஆதாரம்: நிரோடே பரூவா (Nirode Baruah) எழுதிய “பிராக்ஜ்யோதிஷ்புரம் – புராதன அஸ்ஸாமின் தலைநகரம்” (Pragjyotishpura – Capital City of Early Assam).
விக்கிமீடியாவிலிருந்து (Wikimedia) பெறப்பட்ட நரகாசுரனின் பிராக்ஜ்யோதிஷத்தைக் குறிக்கும் இந்த நிழற்படம் 18ம் நூற்றாண்டின் நேபாளி மொழி பாகவதத்திலிருந்து எடுக்கப்பட்டது.