263

மகாபாரதத்தில் அடுத்த தலைமுறை

குழந்தைகள் தினம் என்றாலே நம் செல்வங்களின் குதூகலம் கும்மாளமும் விளையாட்டும் தான் நம் நினைவிற்கு வரும் . ஆனால் மகாபாரதத்தின் இளைய தலை முறை குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்திருக்கிறது.மகாபாரதப் போரில் அடுத்த தலைமுறை முழுவதுமாக அழிக்கப்பட்டது .முக்கியமாக பாண்டவர்கள் தங்கள் குழந்தைகளை இழந்தார்கள்.இவர்கள் தலைமுறை மிகவும் துரதிர்ஷ்டவசமானது, அந்த இளைஞர்கள் மிக மிக துணிச்சலானவர்கள். ஆனால் வாழவேண்டிய வயதில் உயிரிழந்தார்கள்.அவர்களுடைய புகழுக்குரிய செயல்களை , அவர்களின் பெற்றோரின் பெருமைகளும் ப்ரசித்தியும் திரையிட்டு மறைத்துவிட்டது.
குழந்தைகள் தினமன்று மகாபாரதத்தின் அடுத்த தலைமுறையைப்பற்றி பார்க்கலாம்.இந்த வினாடி வினாவை உருவாக்க பல குறிப்பு நூல்களின் உதவி
நாடி இருக்கிறோம். அதில் முக்கியமானது “தி எஸ்ஸெண்ஷியல் மகாபாரதா” என்ற ஏ.ஆர்.கிருஷ்ண சாஸ்திரியின் ” வசன மகாபாரதா” வின் ஆங்கில அநுவாதம் .இது அர்ஜுன். பரத்வாஜும் ஹரி ரவிகுமார் என்பவர்களுடையது இதில் ஆர்வத்துடன் பங்கு கொள்பவர்களில் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

திரௌபதிக்கு எத்தனை குழந்தைகள்?

2. யுதிஷ்டிரருக்கு பின் யார் ஹஸ்தினாபுரத்தின் அரசரானது?

3. மகாபாரதம் முதன்முதலில் ராஜா ஜனமேஜயன் எதிரில் வாசிக்கப்பட்டது. அவர் எந்த பரம்பரையில் வந்தவர்?

4. மகாபாரதத்தின் படி ஏகலவ்யனை வதம் செய்தது யார்?

5. மகாபாரதத்தில் ஸ்ரீராமரின் வாரிசை வதம் செய்தது யார்?

6.துரியோதனனின் மகன் பெயரென்ன?

7. துரியோதனனின் மகளைத் திருமணம் செய்த கிருஷ்ணனின் மகன் யார்?

8. போரில் கர்ணனின் மந்திர ஆயுதத்தை அழித்த ராக்ஷசன் , பீமனின் மகன் யார்?

9. அர்ஜுனன் ஒருதடவை தன் மகனால் கொல்லப்படடு, ஸஞ்ஜீவனியால் உயிர்ப்பிக்கப்பட்டான். அந்த மகன் யார்?

10. கர்ணனின் மூத்த மகன் வ்ரஸஸேனன், கர்ணன் முன்னிலையில் பதினேழாம் நாள் கொல்லப்பட்டான். யார் அவனைக் கொன்றார்?

11. துவாரகி நகரம் அழிந்த பிறகு கிருஷ்ணனின் பேரன் எந்த நாட்டிற்கு மன்னன் ஆனான்?

12. ஸ்ரீ கிருஷ்ணரால் வரம் வழங்கப்பட்டபார்பாரிக் என்பவன் யாருடைய மகன்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In