94

இந்தியாவில் போர்த்துகீசியம்

இன்று டிசம்பர் 19 – இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகளுக்குப் (இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் பிறகு) பிறகு கோவா விடுதலை பெற்ற தினம்.ஐரோப்பிய காலனித்துவ சக்திகளில் போர்ச்சுகீசியர்கள் தான் முதலில் இந்தியாவை வந்தடைந்தார்கள். அவர்கள் 1498 முதல் 1961 வரை இந்தியாவில் இருந்தார்கள். கடல்வழி வாணிபத்தில் போர்த்துகீசியர்கள் முதலில் கோலோச்சினாலும், பின்னர் அதை விரைவில் டச்சுக்காரர்களிடமும் மற்றும் ஆங்கிலேயர்களிடமும் இழந்தார்கள்.கோவா அவர்கள் பிரதானமாக கைப்பற்றிய பகுதி. கார்டினல் கிரேசியஸ் ஒருமுறை கூறியது கோவன் கத்தோலிக்க கலாச்சாரமானது கிறிஸ்துவமே தவிர போர்ச்சுகீசியர் அல்ல. இந்த வினாடி வினா இந்தியாவில் போர்த்துகீசியர்களின் முக்கிய நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் கருப்பொருள்களை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு ஆதாரம் M.N.Pearson’s (எம்.என். பியர்சனின்) “இந்தியாவில் போர்த்துகீசியர்கள்” மற்றும் A.K.Priolkar (ஏ.கே. பிரியோல்கரின்) “தி கோவா இன்குவிசிஷன் (விசாரணை)”

1. 1498ல் இந்தியா வந்தடைந்த பிரபலமான போர்த்துகீசிய கடல்வழி வல்லுநர் (மாலுமி) யார்?

2. கோவாவை 1510 போர்ச்சுகீசிய படை எடுப்பிற்கு முன்பாக யார் ஆண்டார்கள்?

3. எந்த இடைக்கால கத்தோலிக்க சர்ச் நிறுவனம் கோவாவில் கிறிஸ்தவர் அல்லாதவர்களை பயமுறுத்தியது?

4. எந்த ஜெசுவிட் பாதிரியார் கோஏஞ்சொ சாஹிப் (கோவாவின் பாதுகாவலர்) என்று அழைக்கப்படுகிறார்?

5. கேரளாவில் போர்த்துகீசியர்களால் துன்புறுத்தப்பட்ட பண்டைய மத சமூகம் எது?

6. பகவதி தேவி ஆண்டுதோறும் புதிய கோவாவில் உள்ள மார்சல் என்னும் ஊரில் உள்ள தன்னுடைய ஆலயத்திலிருந்து பழைய கோவாவில் உள்ள திஸ்வாடி என்னும் இடத்திற்கு யாத்திரை செல்கிறாள். இந்த யாத்திரை எதை ஞாபகப்படுத்துகிறது?

7. 1683இல் கோவாவை கிட்டத்தட்ட விடுதலை செய்த மராட்டிய தலைவர் யார்?

8. எந்த இந்திய நகரத்தை போர்த்துகீசியர்கள் பிரிட்டிஷாருக்கு வரதட்சணையாக வழங்கினர்

9. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவிலிருந்து மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்தனர். இந்தியாவிற்கு அவர்கள் எதை முக்கியமாக இறக்குமதி செய்தனர்?

10. இந்தியாவின் எந்த முக்கிய உணவு போர்த்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது

11. 1856 ஆம் ஆண்டில் கோவாவில் உள்ள இந்த கட்டிடத்தில் போர்த்துகீசியர்கள் முன்னோடியான ஒரு ஐரோப்பிய கண்டுபிடிப்பை வைத்திருந்தனர். அது என்ன?

12. இந்தியாவின் எந்த பழைய சமூக நடைமுறை இப்போது ஒரு போர்த்துகீசிய வார்த்தையால் அறியப்படுகிறது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In