பம்பாயில் பிரிட்டிஷ் ஆர்வம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளரத் தொடங்கியது. பம்பாய் சிப்பாய்களின் 2வது பட்டாலியன் (படையணி)1768 இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. மராட்டிய இராணுவத்தின் சுறுசுறுப்பால் ஆங்கிலேயர்கள் ஈர்க்கப்பட்டனர். விரைவில் மற்றொரு பட்டாலியன் (படையணி) சேர்க்கப்பட்டது. இந்த பட்டாலியன்கள் (படையணிகள்) (ஜங்கி பல்டன் மற்றும் கலி பாஞ்சுவின் என்று அழைக்கப்பட்டன) ஸ்ரீரங்கப்பட்டினம், கண்ணூர், சூரத் மற்றும் பலுசிஸ்தானில் பிரபலமான போர்களை நடத்தின. அவை மராட்டிய இலகு காலாட்படையின் முன்னோடிகளாக இருந்தன.
சிவாஜி மஹாராஜிடம் பீரங்கி படை இல்லாதிருந்தாலும், அதனை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி கொண்டார். அவரது திறமையான குதிரைப்படை, வலிமையான ஆனால் மெதுவான முகலாய ராணுவத்தை மிஞ்சியது. மராட்டிய ராணுவம் இலகுவான உபகரணங்களை கொண்டிருந்ததுடன், மிகச் சொற்பமான உணவைக் கொண்டு காலம் தள்ளும் வலிமை பெற்றிருந்தது. இதுவே அவர்கள் அதிவேகமாக செயல்படும் படையினராக மாற்றியது.
1664 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு ஆங்கிலக் கடிதம், சிவாஜி ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்ததால், ‘அவர் காற்றோட்டமான உடலையும், இறக்கைகளையும் கொண்டிருப்பதாகவே தோன்றியதாகவும்’ குறிப்பிட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மராட்டிய இலகு காலாட்படை “போலா ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜெய்” என்ற போர் முழக்கத்தைப் பயன்படுத்துகிறது.
இந்தப் படம் ஆல்ஃபிரட் க்ரௌடி லோவெட்டின் மராட்டிய இலகு காலாட்படையின் ஓவியம்.
ஆதாரங்கள்: எம்.ஜி. அபயங்கர் எழுதிய, “போற்றப்பட்ட வீரம்” மற்றும் பாஸ்கர் மெஹென்டாலே எழுதிய “சிவாஜி, அவரது வாழ்க்கை மற்றும் காலம்”,