15

ஹோலி — வினாடி வினா

பேராசிரியர் பி.வி. கானே (Prof. P.V. Kane) குறிப்பிட்டபடி வஸந்தகால பண்டிகையான ஹோலி மிகவும் புராதான மானதுதான். குளிர் காலத்திற்கு விடை கொடுக்கும் சொக்கப்பனை மற்றும் வண்ணக் கலவைகளின் பண்டிகையான ஹோலியைப் பற்றி பல இந்திய நூல்களிலும், கல்வெட்டுகளிலும் குறிப்புகள் காணப் படுகின்றன. ஃபர்ஸ்ட் போஸ்டில் (First Post) நித்யானந்த மிஸ்ராவின் (Nithyananda Mishra) கட்டுரையையும், லியோனா ஆன்டர்ஸனின் (Leona Anderson) வசந்தகால பண்டிகைகள் பற்றிய புத்தகத்தையும் ஆதாரமாகக் கொண்டு, ஹோலி எப்படி நட்புடமை, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் ஒரு அடையாளமாகக் திகழ்கிறது என்பதைப் பற்றி இங்கே சற்று ஆராய்வோமா?

புராணங்களில் ஹோலி பற்றி நன்கு அறியப்பட்ட குறிப்பு ஹோலிகா மற்றும் ப்ரஹ்லாதனைப் பற்றியது. இதில் மற்றது எது?

கார்க சம்ஹிதாவில் (Garga Samhita), பல வட இந்தியக் கோவில்களில் நடத்தப்படும் தெய்வ தம்பதியரின் கொண்டாட்டத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்த தெய்வங்கள் யாவர்?

காளிதாசரால் விவரிக்கப்பட்ட, வங்காளம், அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவில் கொண்டாடப்படும் டோல்-ஜாத்ரா (Dol-jatra) எனும் ஹோலி கொண்டாட்டங்களில் முக்கிய நிகழ்வு எது?

கர்நாடகாவின் சென்னகேஸவ கோவிலில் உள்ள சித்திரங்களிலிருந்து ஒரு பணிப்பெண் வண்ண நீரை இறைத்து மகிழும் காட்சி இப்படத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளது. கோயில்கள் கட்டுமானத்தில் சிறந்த எந்த வம்சத்தினரால் இந்தக் கோயில் கட்டப் பட்டது?

15ம் நூற்றாண்டில் தென்னிந்தியா வந்த ஒரு யாத்திரிகர் “அவர்கள் போவோர் வருவோர் எல்லோர் மீதும் குங்குமப்பூ நீரை தெளிக்கிறார்கள், அரசன் அரசி மீதும் கூட” என்றார். எந்த பேரரசை அவர் இப்படி குறிப்பிடுகிறார்?

முகலாயர்களின் கடைசி சக்கரவர்த்தி ஹோலியைப் பற்றி ஒரு காதல் கவிதை எழுதினார். அவர் யார்?

ஜைமினியின் மீமாம்ஸா (Jaimini’s Mimansa) பற்றிய ஷபராவின் பாஷ்யம், ஒருவேளை ஹோலி, அதற்கு தொடர்பில்லாத, இந்தியப் பரப்பின் (Indosphere) வேறு ஒரு பகுதியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. அது எந்தப் பகுதி?

காமசூத்ரா, வஸந்தோத்ஸவத்தை விவரிக்கிறது — அதில் மக்கள் உதக-க்ஷ்வேதிகா (தண்ணிர் தெளித்தல்) மற்றும் ஸ்ருங்க-க்ரீடாவில் ஈடுபடுகிறார்கள். “ஸ்ருங்க” என்றால் என்ன?

தக்காணத்தில் ஸ்தவாஹன மன்னர் ஹாலா (Stavahana king Hala of Deccan region) எழுதிய கஹ ஸட்டஸாயி (Gaha Sattasai) என்ற கவிதை தொகுப்பு (700 காதல் பாட்டுகள்) ஹோலி கொண்டாட்டத்தை நன்கு விவரிக்கின்றது. அது எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?

கி.பி. 7ம் நூற்றாண்டின் சமஸ்கிருத நாடகமான ரத்னாவளியில் விவரிக்கப்பட்ட வசந்தகால விழாக்கள், தற்கால ஹோலி கொண்டாட்டங்களில் நடப்பதைப் போலவே இருக்கின்றது. சிறந்த அறிஞரான எந்த பேரரசர் இந்த நாடகத்தை எழுதினார்?ا

ஹோலி என்பது அரச குடும்பத்திற்கான பண்டிகை. ஒரு முகலாய பேரரசர் கூட ஹோலியைக் கொண்டாடுவது போல ஓவியம் வரையப்பட்டது. யார் அந்த பேரரசர்?

வேத இலக்கியம் ஹோலியை, ‘ஹோலகா’ என்று குறிப்பிடுகிறது. இது சமஸ்கிருத மூலமான ‘ஹு’ என்ற “வழங்குவதல்” என்பதிலிருந்து வந்தது. இதற்கு என்ன பொருள்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In