75

சுதந்திர தின வினாடி வினா

இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆவது வருட கொண்டாட்டத்தில் இருக்கும் நாம் ஆங்கிலேய ஆட்சி பற்றிய சில கட்டுக்கதைகளை இன்றும் உண்மையென எண்ணுகிறோம். முதலாவது கட்டுகதை ஆங்கிலேயர் இந்தியாவை முகலாயரிடமிருந்து கைப்பற்றினார்கள் என்பது. இது தவறு.ப்ரிடிஷ் கிழக்கிந்திய கம்பெனி மராட்டிய அரசுடனும் ஆங்கிலோ ஐரோப்பிய போரின் மூலம பிரெஞ்சு மற்றும் போர்ச்சுகீசியரையும் வெளியேற்றி இங்கு ஆட்சியை நிலைநாட்டியது. இரண்டாவதாக 1857 இல் நடந்த சிப்பாய் கலகம்தான் நமது முதல் விடுதலை போராட்டம என்பதும் தவறு.இதற்கு முன் பல கிளர்ச்சிகள் நம் விடுதலைக்காக நடத்தப்பட்டது. இந்த வினாடி வினாவில் 1857 தந்து முன் நடந்த புரட்சிகள் பற்றிய பல அறிய விபரங்களைச் பார்ப்போம். வாருங்கள் மக்களே இந்த வினாடி வினா வில் பங்கேற்று பல சுவாரஸ்யமான உண்மைகளை அறியுங்கள்.மேலும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு ” போராளிகள் “Revolutionaries எனும் தலைப்பில் சஞ்சீவ் சன்யால் எழுதிய புத்தகம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

வந்தேமாதரம் பாடலை இயற்றிய எழுத்தாளர் தன் நாவல்களில் வங்காளத்தில் நடந்த “சந்நியாசிகள் கிளர்ச்சியை “இந்திய வரலாற்றில் அழியா இடம்பெறச் செய்தார்.இவர யார்?

முதல் சிப்பாய் கலகம் 1857இல் நடந்தது இல்லை.உண்மையில 1806 இல் நடந்தது.
இது எங்கு நடந்தது?

பாலிகர் அல்லது பாளையக்காரர்கள் என்பவர் அரசர் மற்றும் நவாபுகளின்கீழ் இயங்கிய உள்ளூர் தலைவர்கள் ஆவார்கள். இவர்கள் 1790 ஆங்கிலேயரை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர் .அதன் முக்கிய காரணம் என்ன?

1817 இல் குர்தா எனும் இடத்தில் ஒரு கடலோர மாகாணத்தில் பைகா விவசாய தீவிரவாதிகள் கலகம் நடத்தினர்.அது எந்த மாகாணம்?

5.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளவாயாக இருந்த வேலுதம்பி 1808-1809
இல் ஆங்கில அரசின் வெஸ்லி ப்ரபு அறிமுகப்படுத்திய துணைப் படை திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். திருவிதாங்கூர் எங்கு இருக்கிறது?

ராணி லக்ஷ்மிபாய் எதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டாரோ அதே காரணத்துக்காகவே கிட்டூர் சென்னம்மாவும் ஆங்கிலேயருடன் போரிட்டார்.
இவர்கள் போரிட்ட காரணம் என்ன?

600 வருடங்களுக்கு மேலாக ஆட்சியிலிருந்த ஒரு அஸ்ஸாமிய வம்சம் 18328-30 இல் ஆங்கில அரசை எதிர்த்து புரட்சி எழுப்பினார்கள்.அநத வம்சம் பெயர் என்ன?

1855-56 இல் சந்தால் ஹுல் கிளர்ச்சி ஆங்கிலேயரை சந்தால் பர்கானா எனும் ஒரு ஜில்லாவை உருவாக்க வைத்தது.இது எங்கிருக்கிறது?

புகழ்பெற்ற ஆதிவாசி புரட்சியாளரின் பெயரைத் தாங்கிய பிர்ஸா முண்டா விமான நிலையம் எங்கு உள்ளது ?

உணவு தானியங்களுக்கு பதில் ஆங்கிலேயர் நம் விவசாயிகளை பணப்பயிர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் விவசாயிகளின் பெரிய கிளர்ச்சி உருவானது. 1859-60இல் வங்காளத்தில் நீல் பித்ரொஹோ மீண்டும் 1917 இல் சம்பரன் எனும் இடத்தில் உருவானது. ஆங்கிலேயர் எந்தப் பயிரை பயிரிடச்சொன்னார்?

ராம தண்டு என்றால் என்ன? இந்தப் பெயர் தன் வரி கட்டா இயக்கத்தை நடத்திய (1919இல் )இரண்டு ஆந்திர கிராமங்களை குறிப்பதாகும்

சமீபத்தில் எந்த ஒரு திரைப்படத்தில் ஆந்திரா தெலுங்கானா இவைகளின் (1920-30) பழங்குடி மக்கள் புரட்சி கொண்டாடப்படுகிறது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In