130

விவேகானந்தா-சங்கராந்தி – வினாடி-வினா

1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி, சூரியன் வடக்கு நோக்கி நகரத் துவங்கிய தினமாகிய சங்கராந்தி பண்டிகை நாளில் அதிகாலையில் விவேகானந்தர் பிறந்தார். சூரியனின் இந்த நகர்வு ஒளியையும் நம்பிக்கையையும் குறிக்கும். அதே போல் சங்கராந்தி நாளில் விவேகானந்தர் தோன்றி இந்தியாவிற்ககு ஒரு புதிய ஆன்மீக பயணத்தை துவக்கி வைத்தார். உறங்கிக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் ஆன்மாவை தட்டியெழுப்பினார் என்றால் அது மிகையாகாது. பொது வாழ்வில் பத்தே வருடங்கள் இருந்தாலும், ஆன்மீக உலகின் போக்கையே மாற்றினார். விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை 1953ல் ஸ்வாமி நிகிலானந்தாவின் (Swami Nikhilananda) படைப்பின் மூலம் அறிந்து கொள்வோம்.

விவேகானந்தர் பிறந்தபோது அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் என்ன?

விவேகானந்தருடைய குரு ராமகிருஷ்ணர் எந்த காளிமாதா கோவிலுக்கு பூசாரி?

விவேகானந்தர் ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானித்து, பின் அவருடைய உபதேசங்களை உலகிற்கெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தார். அந்த பாறை எங்கே உள்ளது?

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த கேத்ரியின் (Khetri) சிற்றரசர் ஆற்றிய முக்கியமான பங்களிப்பு என்ன?

அமெரிக்காவில் எந்த நகரத்தில் நடந்த “உலக மதங்களின் பாராளுமன்றத்தில்” (Parliament of World Religions) விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு, அவரை உலகறியச் செய்தது?

எந்த இந்திய பெண் தேசியவாதி விவேகானந்தருடன் சிகாகோ நகரில் 1893ல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டார்?

விவேகானந்தர் நியூயார்க் நகரில் ஆயிரம் தீவு பூங்கா பகுதியில் அமெரிக்க சீடர்களுக்கான ஒரு தியான பயிற்சியை துவக்கினார். அதில் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள்?

ராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகம் எங்குள்ளது?

விவேகானந்தரின் வாழ்க்கையில் எந்த ஒரு சோக நிகழ்வு, அவரை சமூக ஏற்றத் தாழ்வுகள் பற்றி சிந்திக்க வைத்தது?

அமெரிக்காவிலிருந்து கப்பலில் திரும்ப இந்தியா வரும்போது இரண்டு கிருஸ்துவ போதகர்கள் இந்துமதத்தை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள். அப்போது விவேகானந்தர் என்ன பதில் அளித்தார்?

விவேகானந்தரை “தேசீய இயக்கத்தின் ஆன்மீக தந்தை” என்று யார் குறிப்பிட்டார்?

ஸ்வாமி விவேகானந்தரின் முக்கிய ஆன்மீக தகவல் எது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In