93

சிவாஜி ஜெயந்தி வினாடி வினா

இன்று (பிப்ரவரி 19) சிவாஜி ஜெயந்தி. முகலாயர்களை அழித்து, ” அட்டோக் ” முதல் கட்டாக் வரை பிரபலமாக பரவியிருந்த ஒரு பேரரசுக்கு சிவாஜி மகாராஜ் அடித்தளமிட்டார்.
“நமது சமூகமும், நமது தர்மமும் அடியோடு அழியும் அபாயத்தை எதிர்கொண்டபோது, அதனைக் காப்பாற்ற போராடிய மிகச்சிறந்த தேசியவாதிகளில் சிவாஜியும் ஒருவர்,” என்று சுவாமி விவேகானந்தர் அவரை புகழ்ந்தார்.
இந்த சமயத்தில், அவரது தொலைநோக்கு, துணிச்சல் மற்றும் செயல்திறன் ஒப்பிடமுடியாதவை. அவரின் மரபு பல வழிகளில் நம்மிடையே இன்றும் வாழ்கிறது — கலாச்சாரத்தில், சின்னங்களில், இடங்களில், மேலும் நமது தனிப்பட்ட சுதந்திரத்திலும்.
இந்த வினாடி வினாவில் பங்கேற்கும் ஐந்து அதிர்ஷ்டசாலிகள் டாக்டர் உதய் குல்கர்னியின் “மராத்தா நூற்றாண்டு” புத்தகத்தை பரிசாகப் பெறுவார்கள்.

21ம் நூற்றாண்டில் புலம்பெயர் வாழ் மக்களை காந்தம் போல் இழுக்கும், மஹாராஷ்டிராவிற்கு வெளியே உள்ள எந்த நகரத்தில் சிவாஜி தனது குழந்தைப் பருவத்தை கழித்தார்?

சிவாஜியின் முத்திரையிலிருந்து (ராஜமுத்ரா) கூறுகளைச் சேர்த்து இந்திய அரசாங்க நிறுவனத்தின் எந்த சின்னம் சமீபத்தில் மாற்றப்பட்டது?

புகழ்பெற்ற மராட்டிய இலகு காலாட்படை சிவாஜியின் எந்தப் படையின் வலிமையை அடிப்படையாகக் கொண்டது?

VJTI என்று அழைக்கப்படும் மும்பையின் புகழ்பெற்ற விக்டோரியா ஜூபிலி தொழில்நுட்ப நிறுவனம் மறுபெயரிடப்படும்போது அதுபுத்திசாலித்தனமாக VJTI என்ற சுருக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது. V மற்றும் J எழுத்துக்கள் இப்போது எதைக் குறிக்கின்றன?

மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து நிறுவனத்தின் சொகுசு சேவைக்கு சிவாஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ஷிவ்னேரி’ என்கிற கோட்டையின் பெயரிடப்பட்டுள்ளது. அந்த கோட்டையில் சிவாஜியின் எந்த நிகழ்வு நடந்தது?

வலிமைமிக்க பீஜாப்பூர் ஜெனரல் அப்சல் கானைக் கொல்ல சிவாஜி மகாராஜ் எந்த தனித்துவமான ஆயுதத்தைப் பயன்படுத்தினார்?

இந்த “வைர நகரம்” முகலாய செல்வத்தின் தலையாய நகரமாக திகழ்ந்தது. மும்பை துறைமுகம் வளர்வதற்குது முன்னர், இது ஆங்கிலேயர்களின் துறைமுகமாகவும் இருந்தது. சிவாஜியின் முதல் தாக்குதல், இன்றைய மகாராஷ்டிராவிற்கு வெளியே உள்ள இந்த நகரத்தில் நடந்தது. இது எந்த நகரம்?

எந்த பிரபல முகலாய ராஜபுத்திர தளபதிக்கு எதிராக, சிவாஜி மகாராஜ் 1665 ஆம் ஆண்டு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தார்?

சிவாஜி தனது இறப்பிற்கு சிறிது காலம் முன்பு, தனது தெற்கத்திய விஜயத்தின் போது எவ்வளவு தூரம் தெற்கே சென்றார்?

ராஜ்ய வ்யவஹார கோஷா என்பது சிவாஜியால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அகராதி. அவரது நிர்வாகத்தில் எந்த மொழியை இது மாற்ற முயன்றது?
, , ,

நில வருவாய் மற்றும் இராணுவம் தொடர்பான சிவாஜியின் எந்த முடிவு அவரது முக்கிய வெற்றிக் காரணியாகக் கருதப்படுகிறது?

சுதந்திர இயக்கத்தின் எந்த பிரபலமான முழக்கம் சிவாஜியின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து பெறப்பட்டது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In