தாரகாசுரனுக்கு தாரகாக்ஷா, கமலாக்ஷா, வித்யுன்மலி என்ற மூன்று மகன்களிருந்தனர். அம்மூவரும் பிரம்மாவிடமிருந்து தங்களுக்கு இரும்பு, வெள்ளி, தங்கம் நிறைந்த மூன்று நகரங்களில் வாழ்வதற்கும், தாங்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்பொழுதும் ஒரே அம்பினால் தாக்கப்பட்டால் மட்டுமே தங்களுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் எனவும் வரம் பெற்றனர். இப்படி ஒரு விநோதமான வரத்தைப் பெற்ற அவர்கள் செருக்குடன் உலகத்தை அடக்கி ஆண்டு வந்தனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
சிவன் பிரபஞ்சத்தை போர்க்களமாகவும், பூமியைத் தேராகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும், சூரிய சந்திரரை தேர்ச் சக்கரங்களாகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டார். தக்க தருணத்தில் மூன்று நகரங்களும் ஒரே கோட்டிலிருக்கும்போது அம்பெய்தி மூன்று நகரங்களையும் தாக்கி சாம்ப லாக்கினார். அந்த மூன்று நகரங்களே ஆணவம், மாயை, தூய்மை இன்மை ஆகியவற்றைக் குறிப்பனவாகும்.
8ஆம் நூற்றாண்டு மேற்கு சாளுக்கியரின் திருபுரந்தகாவின் சிற்பம். Wisdom Libன் படம்
ஆதாரம் ட கோபிநாத் ராவின் Elements of Hindu Iconography புத்தகம்