தக்ஷகன், காஷ்யபருக்கும் கத்ருவுக்கும் பிறந்த ஒரு சக்திவாய்ந்த நாகப்பாம்பு. இந்திரப்ரஸ்தத்தை ஸ்தாபிப்பதற்காக கிருஷ்ணரும் அர்ஜுனனும் காண்டவபிரஸ்தத்தை எரித்தபோது, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தக்ஷகன் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட பகை காரணமாக, மஹாபாரதப் போரில் தக்ஷகனின் மகன், கர்ணனின் அம்பாக அர்ஜுனனைக் கொல்ல பாய்ந்தபோது, கிருஷ்ணன் தன் கால் கட்டைவிரலால் தேரை தாழ்த்தி விட்டதால் அந்த அம்பு, அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் தட்டிவிட்டது; தலை தப்பியது.
பாண்டவர்களின் வம்ஸவழி வந்த அர்ஜுனனின் பேரன்தான் பரீக்ஷித்து. அவன் ஒரு ரிஷியின் சாபம் காரணமாக தக்ஷகனால் தீண்டிக் கொல்லப்பட்டான். இதற்கு பழிவாங்கும் விதமாக பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன், ஒரு சர்ப்ப யாகத்தை செய்தான். அதில் முதலில் மஹாபாரதம் ஓதப்பட்டது. அப்போது ஆஸ்தீகன் என்ற ரிஷியால் பாம்புகளை கொல்வது தடுக்கப்பட்டது.
தக்ஷகனின் விஷம் பேராபத்தின் ஒரு அம்சமாக கருத்தப்பட்டது. ஆயுர்வேத நிபுணர் சுஷ்ரூதர், அந்த விஷத்தை முறிக்கும் ஒரு மருந்து “தர்க்ஷயம்” என குறிப்பிட்டுள்ளார்.
pilgrimaide.com இணயதளத்தில் உள்ள இந்த படம், இந்தூர் அருகே உள்ள தாகாஜி கோயில். இங்கு தக்ஷனுடன், நோய்களை குணப்படுத்தும் தெய்வமான தன்வந்த்ரியையும் வழிபடுகிறார்கள்.