276

கிருஷ்ணனும் நரகாசுரனும் — வினாடி-வினா

தென்னிந்தியாவிலும் மேற்கு இந்தியாவிலும், கிருஷ்ணர் நரகாசுரனை வென்றதை “நரக சதுர்த்தசியாக” கொண்டாடப்படும் தீபாவளி, உண்மையில் ஒரு பல்நோக்கு பண்டிகை என்பது உங்களுக்கு தெரியுமா? — கிருஷ்ணர் மட்டுமல்லாது ராமர், லக்ஷ்மி, காளி என்ற தெய்வங்களுடனும் தீபாவளிக்கு தொடர்பு உண்டு என்பது சுவாரஸ்யமான விஷயம்தான்.

நம் இதிகாசங்களும் புராணங்களும் நரகாசுரனின் கதையை விவரிக்கின்றன — கிருஷ்ணன் நரகாசுரனை எங்கு வென்றார்? நரகாசுரனின் பெற்றோர்கள் யார்? அவன் சாம்ராஜ்ஜியம் எங்கே இருந்தது? அவனை கொன்ற பெண்மணி யார்? என்பதைப் பற்றியதுதான் இந்த வினாடி-வினா!!

கிருஷ்ணன் மற்றும் நரகாசுரனின் நேர்த்தியான இந்த ஓவியம் Gaatha.com இணைய தளத்திலிருந்து பெறப்பட்டது.

இந்த வினாடி-வினாவில் பங்குபெறும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு அமி கனத்ரா (Ami Ganatra) படைத்த “தெளிவான ராமாயணம்” (Ramayana Unravelled) என்ற புத்தக பரிசு காத்திருக்கிறது. முயற்சி செய்யுங்களேன்!

உங்களுக்கு எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

புராணங்களில் நமக்கு நன்கு தெரிந்தவர்களுக்கு பிறந்தவன்தான் இந்த நரகாசுரன்! அவன் பெற்றோர்கள் யார்?

பிராக்ஜ்யோதிஷ்புரம் என்றழைக்கப்படும் நரகாசுரனின் சாம்ராஜ்யம் தற்காலத்தில் எந்த பகுதியாக கருதப்படுகிறது?

தன் தாயின் காதணிகளை நரகாசுரன் திருடியதற்காக இந்திரன் கிருஷ்ணனின் உதவியை நாடினான். இந்திரனின் அந்த தாய் யார்?

நரகாசுரனுடன் போர் செய்தபோது கருடன் என்ன செய்தார்?

பரவலாகப் அறியப்பட்ட கதைகளில், ஒரு பெண்தான் நரகாசுரனைக் கொல்வார்! யார் அந்தப் பெண்?

நரகாசுரனின் ஐந்து தலை கொண்ட தளபதியை வதைத்ததால் கிருஷ்ணனுக்கு ஒரு பெயர் உண்டு. அது என்ன பெயர்?

நரகாசுரனை தோற்கடித்தபின் அவன் சிறையிலிருந்து கிருஷ்ணன் எத்தனை பெண்களை மீட்டார்?

நரகாசுரனின் கதை ராமாயணத்திலும் உள்ளது.
இதில் நரகாசுரனை வதைப்பது யார்?

காளி புராணத்தின்படி (Kalika Purana) விஷ்ணு, நரகாசுரனிடம் தேவியை எந்த ரூபத்தில் வழிபடச் சொன்னார்?

மகாபாரத போரில் கெளரவர்கள் அணியில் இடம்பெற்ற நரகாசுரன் மகனான ஒரு மாவீரன் யார்?

சத்யபாமாவும் கிருஷ்ணனும் நரகாசுரனை வென்ற பிறகு வரும் எந்த நிகழ்வு தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையில் பிரதிபலிக்கிறது?

தீபாவளியின்போது வேறெங்கும் இல்லாத நரகாசுரனின் உருவபொம்மை எரிப்பு எந்த மாநிலத்தில் நடக்கிறது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In