72

இந்தியப் பொறியியல் விநாடி வினா

இன்று , விஸ்வகர்மா தினம்..
நமது ரிக் வேதத்திலேயே விஸ்வகர்மா கடவுள்களின் கைவினைத்திறன்மிக்க கட்டிடக்கலை நிபுணராக வணங்கப்பட்டதாக தெரிகிறது..)லங்கை, த்வாரகா போன்ற கலைத்திறன் மிக்க நகரங்களை விஸ்வகர்மா வடிவமைத்துள்ளதாக நம்புகிறோம்.
இன்றய நவீன பொறியியலுக்கு தந்தையாகக்கருதப்படும் ஸ்ரீ.விஸ்வேஸ்வரய்யா வின் பிறந்த நாளான செப்டம்பர் 15 பொறியாளர் தினமாகக் கொண்டாடுகிறோம். இவர் கட்டுமானப்பணிகளில் ஏற்படுத்திய நயநேர்த்தி உலகறிந்தது…

பண்டைகாலம் தொட்டு நம் பாரத நாகரிக வளர்ச்சியில் கண்ட மிக அருமையான சாதனைகளைக் கொண்டாடும் வகையில் உலோகவியல் ,நீர்பாசனம் மற்றும் சாலை அமைத்தல் போன்ற துறைகளில் உலகத்துக்கு எடுத்துக்காட்டாகவிளங்கிய படைப்புகள் சிலவற்றைப் பற்றி ஒரு வினாடி வினா பார்ப்போமா? ” பாரதத்தின் தொழில் நுட்பம்” (indyatra.in)என்று முன் வந்த ஒரு வினாடி வினாவை ஒத்த இதை முயற்ச்சிக்கும் 5 அதிர்ஷ்டசாலி அபிமானிகள் விவேக்தேப்ராயின் பகவத்கீதை புத்தகம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீ.மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா வர்களின் பிறந்தநாளைக் பொறியாளர்தினம் எனக்கொண்டாடுகிறோம்…
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் நீர் வழங்கும் எந்த பெரிய அணையை அவர்
கட்டினார்??

சிவகலை மற்றும் வேறு இடங்களில் சமீபத்தில் கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகளிலிருந்து இரும்பு உலோக உருக்குதல் 5000 வருட பழமையானதாக இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது..
சிவகலை எங்குள்ளது?

மிகப் பழமையான ,கிபி முதல் நூற்றூண்டு முதல் இன்றுவரை இந்தியாவில் உபயோகத்தில் இருக்கும் கல்லணை யாரால் கட்டப்பட்டது??

இந்த அரசுவம்சத்தில் , புகழ் பெற்ற திடர்கஞ்ஜ் யக்ஷி யென்ற சிற்பம் போன்று மிக உன்னதமாக மெருகூட்டப்பட்ட பளபளப்பான கற்சிற்பங்கள் தனித்தன்மைவாய்ந்ததாக இருநதது. அந்த அரச வம்சத்தின் பெயர் என்ன??

இந்திய அழகியல் நாகரீக நோக்கத்தை பூர்த்தி செய்வதாக அமைவதற்கு பண்டைய படிக்கிணறுகள் மிக உத்தமமான எடுத்துக்காப்டாகும்.புகழ் பெற்ற .ராணியின்படிக்கிணறு எங்கிருக்கிறது??

அதிகம் அறியப்படாத ஒரு தென்பிராந்திய அரசவம்சம்,மாக்கல்லால் நட்சத்திரவடிவத்தில் தனித்துவம் மிக்க கோவில்களை கட்டினார்கள்.இதில் மிக அழகான சிற்பங்களும் மிக உன்னதமான கடைசல்வேலைப்பாடு செய்யப்பட்ட தூண்களும் நிறுவினார்கள்.எந்த வம்சத்தை சேர்ந்தவர் இவர்???

ஹம்பியில் உள்ள விட்டல் கோவில் மற்றும் சில கோவில்களில் ..புதிரான சில ஒலியியல் அம்சங்கள் உள்ளன.அது என்ன???

கங்கா ஜமுனா ஆற்றிடைப்பகுதியில் விரிவான நீர் பாசனக்கால்வாய்கள் பல
உருவாக்கிய மத்யகால சுல்தான் பெயர் என்ன??

ஜிடி ரோட் என அழைக்கப்படும் தி க்ராண்ட் டிரங்க் ரோட் ஷர் ஷா ஸூரி எனும் முகலாய மன்னனுடன் அதிகமாக இணைக்கப்படுகிறது.எந்த இரண்டு இந்திய ஊர்களை இது இணைக்கின்ற??

ஒரேகல்பாறையில் செதுக்கிச்செய்யப்பட்டது நாம்தங் ஸில ஸகு எனும் ரோட்டுப்பாலம். இதை எங்கு காணலாம்??

யுனெஸ்கோ பாரம்பரிய தளமான இங்கு குளிர்விப்பதற்காக வென்டுரி முறையை கையாளப்படுகிறது. மிகப்ரசித்தமான பின்புற காட்சி கொண்ட இந்த பாரம்பரிய அமைப்பு எது என சொல்லுங்கள் பார்க்கலாம்.

கண்ணாடி இல்லாமல் கண்ணாடியா?
புவிசார் குறி இட்ட தொழில்நுட்பத்தினால் கேரளத்திலிருக்கும் அரண்முலா எதனை பயன்படுத்தி இந்தக்கண்ணாடியை உற்பத்தி செய்கிறது??

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In