158

பாரதத்தின் ராஜா — வினாடி-வினா

முழுமுதற் கடவுளான கணேசன் எல்லோருக்கும் மிகவும் பிடித்த இஷ்ட தெய்வம். மராட்டியத்தில் மிகவும் மதிக்கப்படும் கடவுள். விநாயக சதுர்த்தியின்போது மும்பையின் ஒவ்வொரு பகுதியிலும் ராஜாவுக்கான மரியாதையுடன் மிகஅழகிய சிலைவைத்து வழிபடுவார்கள். கணபதியை மும்பை மட்டுமல்லாது, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, திரிபுரா முதல் குஜராத் வரை என எல்லா இடங்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். உண்மையில் அவர் நாம் பாரத தேசத்திற்கே ராஜாதான்.

தமிழ்நாட்டில் செல்லமாக அவர் “பிள்ளையார்” என்று அழைக்கப்படுகின்றார்.
வாருங்கள். விநாயகரை இந்தியாவில் எவ்வாறெல்லாம் வழிபடுகின்றனர் என்பதற்கு இந்த வினாடி-வினாவில் உள்ள 12 கேள்விகளின் மூலம் விடைதேடுங்கள் —

1) “கணபதி பப்பா மோரியா” (Ganapathy Bappa Morya) என்ற கோஷம் எப்படி உண்டாயிற்று?
2) ஜைன மதத்தினர் கணேசனை எப்படி வழிபடுகின்றனர்?
3) விநாயகர் மற்ற எல்லா பண்டிகைகளிலும்கூட ஏன் முதலில் துதிக்கப்படுகிறார்?
4) எந்த புராணத்தில் கணபதியை உபநிஷதங்களுடன் இணைத்து சொல்லப் பட்டுள்ளது?
— இவை யாவற்றுக்கும் விடை கிடைக்கும்.

இந்த வினாடி-வினாவில் பங்கேற்கும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு “கணேசனே ஆரம்பமும் மங்களகரமானவனும்” (Ganesha, the Auspicious, the Beginning) என்ற வண்ண சித்திரங்களுடன் கூடிய வியத்தகு புத்தகம் பரிசாகக் கிடைக்கும்.
இந்த “கணபதி விசர்ஜன” நிழற்படம், விருதுகளால் புகழ்பெற்ற சலோனீ ஜெயின் (Salonee Jain) எடுத்தது.

ஸ்ரீமந்த் பாவ்ஸாஹெப் ரங்காரி (Shrimant Bhausaheb Rangari) என்பவர் “சர்வஜனிக்” எனப்படும் பொதுவிட விநாயகர் வழிபாட்டை 1892ல் ஆரம்பித்தார். அது எந்த நகரில்?

“கணபதி பப்பா மோரியா” (Ganapathy Bappa Morya) என்ற கோஷம் எல்லோராலும் விரும்பப்படுவது. இதில் “மோரியா” என்பது எதைக் குறிக்கின்றது?

பிள்ளையார் சதுர்த்தி தவிர வேறொரு பொதுப் பண்டிகையின்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் விநாயகரை துதிப்பதுண்டு. அது எந்தப் பண்டிகை?

மும்பையில் பண்டிகைகளுள் “லால்பாக்ச்சா ராஜா” எனும் கணேஷ்மஹோத்ஸவ் (Ganeshmahotsav — விநாயக சதுர்த்தி) மிகவும் பிரபலமானது. இவர் “நவஸாச்சா கணபதி” (Navasacha) என்றும் போற்றப்படுகிறார். “நவஸாச்சா” என்றால் என்ன?

“இடர் நீக்கி சுடர் தருவோனே” (சுக்-கர்த்தா துக்-ஹர்த்தா — Sukhkarta Dukhharta) என்ற மிகப் பிரபலமான மராத்தி பஜனைப் பாடலை இயற்றியவர் சத்ரபதி சிவாஜிக்குக் கூட ஒரு தூண்டுகோலாக இருந்தார். யார் அவர்?

கணேசனின் வெவ்வேறு அவதாரங்களைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட முத்கல புராணம் (Mudgala Puranam) உபநிஷத்தின் மகாவாக்கியம் ஒன்றை விவரிக்கிறது. அது எது?

கைரதாபாதில் விநாயக சிதுர்த்தி கொண்டாடும் இடத்தில் வைக்கப்படும் சிலை நாட்டின் உயரமான சிலைகளில் ஒன்று. ஆனால் அது வெறும் ஒரு அடி உயரத்தில் ஆரம்பித்தது. இது எங்கே நடக்கிறது?

வக்ரதுண்ட மஹாகாய” (“Vakratunda Mahakaya”) எனும் பிரபலமான ஸ்லோகத்தை எழுதியவர் யார்?

ஜைன மதத்தினரும் விநாயகரை வழிபடுகிறார்கள். ஜைனர்களுக்கு அவர் எந்த விதத்திற்காண கடவுள்?

தென்னிந்தியாவில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் கணேசனை பற்றிய ஒரு பாடல் மிகவும் பக்தியுடன் பாடப்படுகிறது. அது எந்தப் பாடல்?

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தடைகளை உடைப்பவர் துதியுடன் ஆரம்பமாகிறது. சிலர் இதை கணபதி வந்தனம் என்பார்கள். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எங்கே காணலாம்?

பண்டிகையின் ஒரு கட்டத்தில், பூரி ஜகந்நாதர் “ஹாத்தி பேஷா” (Hathi Besha – யானை வேஷம்) எனும் கணேசனின் உருவம் கொள்வார். அது எந்த பண்டிகை?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In