369

மாணவர்களுக்காக கீதை

இன்று (Dec 1, 2025) கீத ஜெயந்தி. இந்து மதம் உலகுக்கு அளித்த பொக்கிஷம் பகவத் கீதை. பல அறிஞர்கள், உலகத்திலேயே மிக அழகான தத்துவம் பகவத் கீதை என்று கூறுகிறார்கள். இந்த வினாடி வினாவில் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை நாம் பார்ப்போம்.

கீதை கடல் போன்றது. நாங்கள் வெறும் மாணவர்கள். இந்த வினாடி வினாவில் எதுவும் தவறு இருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வினாடி வினாவிற்கு ராஜாஜியின் ” பகவத் கீதை – மாணவர்களுக்கான கையேடு” என்ற புத்தகத்தையும் பிபேக் டெபாராயின் பகவத் கீதை மொழிபெயர்ப்பையும் உபயோகப்படுத்தியுள்ளோம். ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பை https://www.holy-bhagavad-gita.org/ என்ற இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

1. கிருஷ்ணர் அர்ஜுனருக்கு ஒரு அடிப்படை தத்துவத்தை விளக்கினார். அந்த விளக்கத்தினாலே அர்ஜுனன் அவனது குழப்பமான நிலையிலிருந்து வெளிபட முடிந்தது. இது எந்த தத்துவம்?

2. கர்மா என்பது கிருஷ்ணர் சொல்லிய ஒரு முக்கியமான கருத்தாகும். கர்மா என்றால் என்ன?

3. எதை கைவிடுங்கள் என கீதா நமக்கு அறிவுறுத்துகிறது?

4. அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான், “ஒரு மனிதன் பாவம் செய்ய விருப்பப்படாத போதும் அவன் ஏன் பாவம் செய்கிறான்?” கிருஷ்ணர் என்ன பதில் கூறுகிறார்?

5. மனதை கட்டுப்படுத்த கிருஷ்ணர் எந்த வழியை காண்பிக்கிறார்?

6. நம்மைச் சுற்றியுள்ள தீமையை காணும் போது, அந்நேரத்தில் அமைதி காக்க, கிருஷ்ணர் மனிதர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்?

7. மனிதர்களுக்கு பல மத நம்பிக்கைகள் உண்டு, பல வழிபாட்டு முறைகள் உண்டு. மற்ற மத நம்பிக்கை உள்ளவர்களை கிருஷ்ணர் எவ்வாறு காக்கிறார்?

8. “உன் மனதை என் மீது மட்டும் செலுத்து, என் மீது பக்தி கொள், என்னை வணங்கு, என் முன் பணிந்து வணங்கு. நீ என் அன்புக்குரியவன் என்பதால், நீ என்னை அடைவாய் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்ற முன்வரும் வசனத்தின் மூலம் கிருஷ்ணர் என்ன மனப்பான்மையை பரிந்துரைக்கிறார்.

9. கீதையின்படி உண்மையான அறிவு அல்லது ஞானம் என்பது எது?

10. கிருஷ்ணர் அர்ஜூனுனனுக்கு விஸ்வரூபத்தை காட்டியதன் ஆன்மீக அர்த்தம் என்ன?

11. ஹிந்துக்களின் இன்னொரு புத்தகம் கீதையின் கர்மயோகா கொள்கை பற்றி கூறுகிறது ,அது எந்த புத்தகம்?

12. கீதையில் 700 ஸ்லோகங்கள் உண்டு, இந்துக்களின் மிக பிரபலமான புத்தகம். இது எந்த பாணியில் உள்ளது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In