மலபாரில் போர்ச்சுகீசியர்கள் தரையிறங்கியபோது சிரிய ஆர்த்தடாக்ஸ் சமூகம் (செயின்ட் தாமஸ் கிறிஸ்தவர்கள்) செழித்து வளர்ந்து கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் கூட்டாளிகளாக இருந்தனர். இந்தியாவிற்கு பயணம் செய்து 52 CE இல் மரணம் அடைந்ததாக கூறப்படும் இயேசுவின் சீடரான செயின்ட் தாமஸின் வழித்தோன்றல் ஆவார்கள். போர்ச்சுகீசியர்கள் 1517 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மயிலாப்பூரில் செயின்ட் தாமஸின் கல்லறையை கண்டுபிடித்தனர். பின்னர் அதற்கு சான்தோம் என்று பெயர் சூட்டினர். இச்சமூகம் சிரியாக் அல்லது நெஸோடிரியன் சபையை சார்ந்து பெஷிடா (எளிமை) என்று அழைக்கப்படும் வேறொரு பைபிளை பின்பற்றுகிறது. போர்ச்சுகீசியர்கள் இதனை மதவெறி என கருதினர்.
1599-ல் ஆயர்களின் மதக்கூட்டத்திற்குப் பிறகு, இச்சமூகம் லத்தின் சமூகச் சடங்குகளை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டது. சிரிய கிறிஸ்தவப் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. சிரியாக் பைபிளின் ஒரு நகல் மட்டுமே எஞ்சியதாகக் கருதப்படுகிறது. 1653-ல் சிரிய கிறிஸ்தவர்களின் ஒரு பகுதியினர் தங்கள் பண்டையச் சடங்குகளைப் பாதுகாக்க கூனன் சிலுவை முன் சத்தியம் செய்தனர். இச்சமூகம் பின்னர் ரோமைச் சேர்ந்த சிரியோ மலபார் சர்ச் என்றும் , சிரிய மலங்காரா சர்ச் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட சுதந்திரமான யோக்கோபைட் சிரியர்கள் என்றும் பிரிந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்ட 1866 ஆம் ஆண்டில் டாக்டர் புக்கானனுக்கு மலங்காரா சர்ச்சால் நன்கொடையாக வழங்கப்பட்ட சிரியாக் பைபிள் படம்.