144

முக்கிய உபநிஷத்துக்கள்

உபநிஷத்துக்கள் வேதாந்தம் ஆகும். இவை இந்திய சித்தாந்தத்தின் உயிர் ஊற்று.
சீடன் குரு அருகே அமர்ந்து கற்றுக் கொள்ளும் பாரம்பரிய முறையிலே இவை அமைந்துள்ளன
முக்கிய உபநிஷத்துக்கள் 10(அ ) 13 வகைப் படும்
ஆதிசங்கரர் ஶ்ரீராமானுஜர் போன்ற குருமார்கள் உபநிடதங்களுக்கு உரை எழுதி உள்ளார்கள்
இவ்வினாடி வினாவில் “பிரம்மம் நிலையானது , உலகம் நிலையற்றது ” என்பதைக் காணலாம்

Maniam Selvan Picture – Guru Sishya tradition in the background of Dakshnimoorthy

ஈஷா உபநிஷதம் கூற்றுப்படி “நமது எண்ணம் சரியாக இருந்தால், நம் செயல்களின் விளைவுகள் நம்மை பாதிப்பது இல்லை”. இதே கருத்தை வேறு எந்த இறைநூலில் காணலாம்,?

கேன உபநிஷதம் பெயர் எப்படி வந்தது? கேன என்றால் என்ன?

மனம் , புத்தி அக வளர்ச்சி ஆத்மா இவைகளின் தொடர்பு பற்றி கடோபநிடதம் எந்த உதாரணத்தை காட்டுகிறது

இந்து மதத்தின் ஆன்மிக சாதனையில் ஒரு மூலக்கல்லாக இருக்கும் எந்தச் சின்னத்தின் முக்கியத்துவத்தை பிரஸ்ன உபநிஷதம்
வலியுறுத்துகிறது?

நமது குடியரசின் தேசிய குறிக்கோள் முண்டக உபநிஷத்திலிருந்து பெறப்பட்டது; அந்த குறிக்கோள் என்ன?

மாண்டூக்ய உபநிஷதம், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைத் தாண்டிய நான்காவது நிலையை, பரமார்த்த சத்தியத்தின் இயல்பாக விளக்குகிறது.
அந்த நிலை எது?

தைத்திரிய உபநிஷதம் மனிதனுடைய ஆளுமை எத்துணை உறைகள் கொண்டது என கூறுகிறது ?

ஐதரேய உபநிஷதம் சில சமயங்களில் ___ எழுதியவர் பின்னணியை குறிப்பிட்டு ஒரு புனித நூலாக அழைக்கப்படுகிறது. எழுதியவர் யார்?

சாண்டோக்ய உபநிஷத்தில், ஹரித்ருமத கௌதம முனிவர் யார் மகனை தன் சீடராக ஏற்றுக்கொள்கிறார்?

பிரஹதாரண்யக உபநிஷதம் “இது அல்ல, அது அல்ல” எனும் நிராகரிக்கும் முறையை பயன்படுத்துகிறது. இந்த உன்னதமான யதார்த்தத்தை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது என்பதை எடுத்துரைக்கிறது. இந்தக் கொள்கை பொதுவாக எவ்வாறு அறியப்படுகிறது?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In