நிகழ்ச்சிக் கலைகள் மூலம் வேதங்களின் சாரத்தை சாமானிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், பிரம்மா ஐந்தாவது வேதமாக நாட்டிய வேதத்தை இயற்றியதாக நம்பப்படுகிறது. பின்னர் அவர், கி.மு. 500-ம் ஆண்டு வாக்கில் நாட்டிய சாஸ்திரத்தை இயற்றியதாக நம்பப்படும் பரத முனிக்கு நாட்டிய வேதத்தைக் கற்பித்திருக்கிறார். நாட்டிய சாஸ்திரம், உபவேதங்களில் ஒன்றாகிய கந்தர்வ வேதத்தின் ஒரு பகுதியாகும்.
நாட்டிய சாஸ்திரம் என்பது அனைத்து நிகழ்ச்சிக் கலைகள், இயல் இசை நாடகம் இலக்கியம், அழகியல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான கலைக்களஞ்சியமாகும். இது நாடகத் தொடர்பின் உணர்ச்சிகள், மனநிலைகள் மற்றும் மனோபாவங்களைக் கையாள்கிறது. உடல், சொல், பொருள் மற்றும் உணர்ச்சி ரீதியான முறைகள் மூலமான வெளிப்பாடுகளை இது உள்ளடக்கியுள்ளது.
இது இசை, வாத்தியக் கருவிகள், நடனம், சொல்லணிகள், பாடல் வரிகள், இலக்கணம், உரைநடையியல், யாப்பியல், மேடை அமைப்பு, அரங்க அமைப்புகள், கட்டிடக்கலை, ஆபரணங்கள், ஒப்பனை மற்றும் உடைகள், நாடகக் கல்வி ஆகிய அனைத்துப் படைப்புத் துறைகளையும் விரிவாக உள்ளடக்கியுள்ளது.
நாட்டிய சாஸ்திரம் கலைஞர்களின் வெளிப்பாடுகளை (பாவம்) விட மிகவும் ஆழமானது. அது பார்வையாளர்களிடையே மேன்மையான அழகியல் உணர்வை (ரசனையை) தூண்டுவதே நோக்கமாகக் கொண்டுள்ளது. பரதர் ரசனையை, பார்வையாளர்களால் அனுபவிக்கப்படும் அழகியல் சுவை அல்லது உணர்ச்சிகளின் சாரம் என்று வரையறுக்கிறார். மேலும், “நாட்டியம் தர்மத்தைப் போதிக்கவும், நற்பண்புகளை ஊக்குவிக்கவும், எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியூட்டவும் உருவாக்கப்பட்டது; நிகழ்ச்சிக் கலை வெறும் பொழுது பொழுதுபோக்காகக் மட்டும் கருதப்படுவதில்லை, மாறாக, மோட்சம் அல்லது பேரின்பத்தை அடைவதற்கான ஒரு வழியுமாகும் பார்க்கப்படுகிறது” என்கிறார்.
இன்றைய காலத்திற்கு பொருந்துபவை: நாம் ‘கானா’ என்ற சொல்லை பாடல்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல், நாட்டிய சாஸ்திரத்தில் மிகவும் முறைசார்ந்த கந்தர்வ இசையிலிருந்து வேறுபட்ட, பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட பிரபலமான, பிராந்திய இசையைக் குறிக்கின்றது. மேலும், தமிழ்நாட்டில் கானா இசை என்பது முற்றிலும் கிராமிய மற்றும் முறைசாரா இசையைக் குறிக்கிறது.
இங்குள்ளது நவரச வெளிப்பாடுகளின் உருவப்படம் ஆகும்.