தந்தை தக்ஷன், ஒரு யாகத்தின் போது தன் கணவனான பரமசிவனை “ஏழை” என அவமதித்தால் சதி மிகவும் வெகுண் டெழுந்து யாகத்திலேயே தீக்குளித்து விட்டாள். சதியின் இந்த மறைவுக்குப் பின், பரமசிவன் கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டு தவம் செய்தார். இதனால் கலக்கமடைந்த தேவர்கள், சதியின் அம்சமான பார்வதி தேவியுடன் சிவனை இணைத்து வைப்பதற்காக மன்மதனை அனுப்பி, மலர்க் கணையை அவர்மேல் தொடுக்க வைத்து அவருடைய தவத்தைக் கலைத்தனர். இதனால் கோபமுற்ற பரமசிவன், தன் நெற்றிக் கண்ணைத் திறந்து, மன்மதனை எரித்து விட்டார். பின்னர் அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்காக சிவபெருமான் மனமிரங்கி மன்மதனுக்கு உருவம் இல்லாமல் உயிர் மட்டும் கொடுத்தார். மன்மதனின் அந்த மறுபிறப்பை குறிப்பதுதான் இன்றும் நாம் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை.
ஹோலிப் பண்டிகையின் முதல் நாள் கொண்டாடப் படும் காமதகனம், மன்மதன் பரமசிவனால் எரிக்கப் பட்டதைக் குறிக்கின்றது. புராதன குறிப்புகளில், வஸந்தகால உற்சவத்திற்கு காமோத்ஸவ், மதநோத்ஸவ் போன்ற பெயர்கள், காமனுடன் உள்ள இணைப்பை காரணமாகக் காட்டுகின்றன. இந்தக் கதை மத்திய மற்றும் தெற்கு இந்தியாவில் இன்றும் பரவலாக இருக்கிறது. ஹோலகா என்ற பெயர் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு பொதுவானதாகும். இவையெல்லாம் காலப்போக்கில் மங்கிவிட்டாலும் சில தென்னிந்திய பகுதிகளில் இன்றும் நினைவு கூறப் படுகிறது. மகாராஷ்டிராவில் தூளிவந்தன் பண்டிகை ஹோலியின் ஒரு பகுதியாகக் கருதப் படுகிறது. இது காமதேவன் சாம்பலில் இருந்து உயிர்த் தெழுந்த சம்பவத்தை கொண்டாடடு வதைக் குறிக்கின்றது.
ஆதாரம்: நாகராஜ் படூரி. https://indiafacts.org/holi-kaamotsava-age-old-hindu-festival-love/
The 1890 painting is Shiva burning Kamadeva.