37

ரக்ஷா பந்தன் வினாடி-வினா

பாஸ்கராச்சாரியர் தனது புகழ்பெற்ற கணித நூலுக்கு “லீலாவதி” என்று பெயரிட்டார். லீலாவதி யார் என்பதற்கு உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அவர் பாஸ்கராச்சாரியரின் மகள் என்று கூறப்பட்டாலும், நூலில் அவரை அழைக்கும் விதத்தை வைத்து சில அறிஞர்கள் அவர் மனைவியாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். ஆனால், “லீலாவதி” நூல் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

இன்று அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் சாதிக்கும் இந்தியப் பெண்கள், லீலாவதியின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து வருகின்றனர். வேதவேதாந்த சிந்தனையாளர்கள் முதல் இன்றைய ஏவுகணை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிவியல் சாதனையாளர்க‍ளாக வரை, இந்திய மண்ணில் பல சிறந்தப் பெண்கள் இருந்துள்ளனர். இந்த ரக்ஷா பந்தன் நாளில், இந்தியாவின் STEM துறையில் சாதித்த பெண்களைக் கொண்டாடுவோம்.

“Women Scientists of India” (National Book Trust) மற்றும் “Leelavathi’s Daughters” (Indian Academy of Sciences) ஆகிய நூல்கள் இவர்களின் சாதனைகளையும் பாரம்பரியத்தையும் பதிவு செய்கின்றன. எங்கள் வினாடி-வினா இந்த இரண்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டது.

இதில் உள்ள படங்கள் Wikimedia Commons-லிருந்து பெறப்பட்டவை.

1. வேத காலத்தில் பிரம்மவாதினிகள் (பெண் ரிஷிகள்) இருந்தனர். இவர்களில், அகஸ்திய முனிவரின் மனைவியாக இருந்தவர் யார்?

2. ரூஸா (Rusa) இடைக்காலத்தில் வாழ்ந்த ஓர் ஆயுர்வேத மருத்துவப் பெண்மணி. அவரது மருத்துவப் பணி, புகழ்பெற்ற ஹாரூன் அல்-ரஷீத் அரசவையில் முக்கிய இடம் பெற்றது. அவரது படைப்பு எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது?

3. கார்கி மற்றும் மைத்ரேயி பண்டைய காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் தத்துவவாதிகள். அவர்களின் பெயரில் உள்ள இரண்டு கல்லூரிகள் எந்த நகரத்தில் உள்ளன?

4. கமலா சோஹோனி (Kamala Sohonie) இந்தியாவில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் (PhD) பெற்ற முதல் பெண் ஆவார். மற்றொரு பிரபல விஞ்ஞானி முதலில் அவருக்கு தனது கல்வி நிறுவனத்தில் சேர்க்கை வழங்க மறுத்தார். பின்னர், அவரையே தனது நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த விஞ்ஞானி யார்?

5. மேற்கத்திய மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணான அவர் தனது 9-ஆம் வயதில் திருமணம் முடித்து, 14-ஆம் வயதில் தனது குழந்தையை இழந்தார். 18-ஆம் வயதில் மருத்துவப் படிப்புக்காக இந்தியாவை விட்டு வெளிநாடு சென்று, 21-ஆம் வயதில் மருத்துவப் பட்டம் பெற்று, அதே வயதில் உயிரிழந்தார். அவர் யார்?

6. ருக்மாபாய் மருத்துவத் தொழில் செய்த இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆவார். அதற்கு முன்பே, அவர் சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் பல வெற்றிகளைப் பெற்றார். அவர் எந்த சமுகப்பிரச்சினைக்காக புகழ்பெற்ற போராட்டம் நடத்தினார்?”

7. “அக்னி புத்ரி” என்று அழைக்கப்படும் இவர், அக்னி-IV மற்றும் அக்னி-V ஏவுகணைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் முதல் பெண் இயக்குநராகவும் இருந்தார். யார் இவர்?

8. மங்களா மணி, தனது 56-ஆம் வயதில், உடல் மற்றும் மனதிற்கு சவாலான 15 மாதங்கள் நீடித்த பயணத்தில் தனியாக இருந்த ஒரே பெண்ணாக இருந்தார். அவர் எங்கு சென்றிருந்தார்?

9. ஒரு சர்க்கஸ் கலைஞரின் குடும்பத்தில் பிறந்த இவர், இந்திரா காந்திக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், 546372891^23 என்ற எண்ணுக்காகவே இவர் மிகவும் பிரபலமானவர். இவர் யார்?

10. அன்னா மணி, எம்.எஸ்.சி. பட்டம் இல்லாததால் முனைவர் பட்டத்தைப் பெற முடியவில்லை. அளவிடும் கருவிகள் உருவாக்கும் துறையில் முன்னோடியாக இருந்த அவர் வடிவமைத்த கருவிகள் எந்தத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன?

11. பீபா சவுத்ரியின் துகள் இயற்பியல் தொடர்பான ஆய்வுகளை இரண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். ஆனால், அவரது பங்களிப்புகள் அப்போது முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இன்று அவர் எவ்வாறு நினைவு கூரப்படுகிறார்?

2. ஒரு (பொறுப்பு) மகாராணி கொடையாய் தந்த நிலமும், ஒரு பெரிய தொழிலதிபரின் சொத்தில் பாதியும் சேர்ந்து ஓர் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தன. அது எந்த நிறுவனம்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In