‘ஸ்கந்த’ என்பது கார்த்திகேயரை (குமாரர் & முருகர் என்றும் அழைக்கப்படுகிறார்) குறிக்கும் பெயர். தேவி பார்வதி ஸ்கந்தனின் தாய், எனவே ‘ஸ்கந்தமாதா’ என்ற பெயரால் போற்றப்படுகிறார். ஒரு காலத்தில், அசுரன் தாரகாசுரன் தீவிர தவம் செய்து, சிவனின் மகனால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்று பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றான். சிவன் ஒரு உறுதியான துறவி என்றும், ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும் அவன் நினைத்தான். இதனாலேயே அவன் பாதுகாப்பாக உணர்ந்து வெறித்தனமாக நடந்து கொண்டான். நாரதர் பார்வதியிடம் ‘தவத்தை மேற்கொண்டு சிவனை மணக்க சம்மதிக்க வைக்குமாறு’ வேண்டினார். சிவன் – பார்வதி திருமணத்தின் பயனாக தேவர்களின் சேனாபதியான ஸ்கந்தன் பிறந்தான். யோக ரீதியாக, செயல் (ஸ்கந்தன்) என்பது, அறிவால் (ஸ்கந்தமாதாவால்) வழிநடத்தப்பட வேண்டும்.
“சிம்ஹாசன-கதா நித்யம் பத்மஸ்ரித கர-த்வயா, சுபதாஸ்து சதா தேவி ஸ்கந்தமாதா யஷஸ்வினி” என்று அவரது பாடல் கூறுகிறது. அதாவது “சிங்கத்தின் மீது அமர்ந்து வலம் வருபவளும் , நித்தியமானவளும், தாமரைகளை தனது இரு கரங்களில் ஏந்தியவளும், சிறப்புமிக்கவளுமான தேவி ஸ்கந்தமாதா, தயவுசெய்து எனக்கு எப்போதும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தருள்வாயாக.”
Picture Credit: Pattachitra by Rabi Behera