84

குடியரசுதின வினாடிவினா

“சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. அதை எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தியவர் நேதாஜி.சுபாஷ்சந்திர போஸ். நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்தின் மிக முக்கியமான திசையை ஏற்படுத்தியவர் நேதாஜி. INA எனப்படும் இந்திய தேசிய ராணுவம், இரண்டாம் உலகப்போரின்போது
எங்கிருந்தோ அதிவேகமாகவும் சக்தி மிகுந்ததாகவும் முளைத்தது. அதன் தலைவரான நேதாஜி வெல்ல முடியாதவராகவும் போற்றப்படுபவராகவும் இருந்தார் என வரலாற்றாசிரியர் கூறுவர்.இந்தியசுதந்திரத்தை தன் இதயத்துடிப்பாகக்கொண்டு தீவிரதேசியவாதிகளை சார்ந்து INA வை உருவாக்கினார்..இவரைப்பற்றி நம் கவிக்குயில் சரோஜினி நாயுடு
” நேதாஜி எனும் சுடரொளி மிக்க எரியும் வாள்தான்வணங்கும் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக என்றென்றும் உறை நீக்கப்பட்டு தயாராக இருக்கும்.. இந்த தேசம் மிக விரைவில் சுதந்திரம் அடையும்” என்றார்..

இன்று 26 ஜனவரி நம் 76 ஆவது குடியரசு தினம். அதோடு 23 ஜனவரி நேதாஜியின் பிறந்தநாள்
.இந்த தருணத்தில் நேதாஜியை நினைவுகொண்டு வரும் தலைமுறையினர் இந்த மாவீரரைப்பற்றி அறிய
பீட்டர்வார்ட் ஃபே எழுதிய The forgotten Army எனும் புத்தகத்திலிருந்து நம் சுடர் மிகு வாள் பற்றி அறிவோமா?

ஜனவரி 1941இல் கொல்கத்தாவில் அவரது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தப்பி போன நாடு எது?

எந்த நகரத்தில் இந்திய தேசிய ராணுவம் INA முதன்முதலில் ப்ரகடனப்படுத்தப்பட்டது?

இந்திய தேசிய ராணுவத்தின் முதல் தளபதியாக யாரை ஜப்பானியர் நியமித்தனர்?

இந்திய தேசிய ராணுவத்தின் முதல் அரசியல் தலைவர் ஒரு விடாமுயற்ச்சியுடைய புரட்சியாளர்.அவர் யாரென கண்டுபிடியுங்கள்

ஆங்கிலேயரின் மதிப்பின்படி இந்திய தேசிய ராணுவத்தின் தோராயணமான வீரர் பலம் என்ன?

21 அக்டோபர் 1943ம் ஆண்டு, நேதாஜி என்ன அறிவிப்பு செய்தார்? 

இந்திய தேசிய ராணுவத்தின் தேசிய கீதம் இந்தியில் ” சுக் சுக் சேன் ” என்பதாகும்…இதன் மூலத்தை பெங்காலியில் எழுதிய கவிஞர் யார்??

“இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படையும் இருந்தது.அந்த படைப்பிரிவின் பெயர் என்ன?

ஏப்ரல் 1944 ல் இந்திய தேசிய ராணுவம் முதன்முதலில் தன்கொடியை எங்கு ஏற்றியது?

ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய தேசிய ராணுவத்தின் போராட்டத்தில் அதன் முக்கிய போர்களமாக எந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான சாலை இருந்தது?

இந்திய தேசிய ராணுவம் தன் கடைசி போரை ஐராவதி நதி கரையில் நடத்தியது. இந்த நதி எங்கு இருக்கிறது???

ஆங்கிலேயரால் முதன் முதலில் விசாரணை செய்யப்பட்ட மிக பிரபலமான
இந்திய தேசிய ராணுவ படைவீரர்கள் மூவர் யார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In