ராமர் கதை கவிதை வடியில் ஏராளமாக உள்ளன; ஆனால் நாடக வடிவில் மிகச் சிலதான் உள்ளன. பாஸரும் அஸ்வகோஸரும் (Bhasa and Asvaghosa) கி.பி. 1–2ம் நூற்றாண்டுகளில் எழுதிய சமஸ்கிருத நாடகங்களே முதல் படைப்புகளாக கருதப்படுகின்றன.
அஸ்வகோஸர் ராமர் கதையை புத்தமத கருப்பொருளாக எழுதினார். பாஸர், ராமாயணம், மஹாபாரதம், பிருஹத்கதா இதிகாசங்களைத் தழுவிய 13 கதைகளை, நாடகங்களாக எழுதினார்.
பாஸர் ராமர் கதையை, யஞ்யபலா, பிரதிமநாடகா, அபிஷேகநாடகா (Yagyaphala, Pratimanataka, Abhisekhanataka) என மூன்று பகுதிகளாக எழுதிய பெருமையுடையவர். இதில் பிரதிமநாடகா – அபிஷேகநாடகாவின் உண்மைத்தன்மை பற்றி விவாதிக்கப்பட்டது. சுவாரசியமானது என்னவென்றால் பாஸர், சேதுசமுத்திரதைக் கட்டாமல் ராமர் கடலைப் பிளந்து இலங்கைக்குச் சென்றார் என்று கூறியதுதான். பாஸர் எழுதிய நாடக வடிவே ராமர் கதை மிகப் பழமையானது என்பதற்கு உதாரணமாகும்.
Picture – Fragments of Shiv Danush, fossilised remains at Dhanush Dham, near Janakpur