104

பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை விநாடி வினா

ஜூன் மாதம் 27ம் தேதி பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. பூரி என்றாலே ரதயாத்திரை, ரதயாத்திரை என்றால் பூரி என்ற அளவிற்கு இந்தியாவிலும் அந்நிய நாடுகளிலும் இவை இரண்டும் மக்கள் மனதில் மிகநன்றாக பதிந்துள்ளவை. நமது நாட்டில் உள்ள யாத்திரை ஸ்தலங்களில் பூரி மிகவும் தொன்மையானது. “ஜகன்னாத் ரத்” (Jagannath Rath) என்பதே “ஜூக்கர்நாட்” (juggernaut) என்ற ஆங்கில சொல் வருவதற்கு காரணமாகியது. இந்த வினாடி வினாவில் பூரி மற்றும் ரதயாத்திரை பற்றிய மிக சுவாரஸ்யமான 12 தகவல்களை தெரிந்து கொள்வோம் — பூரி எத்தனை பழமையானது? இந்த யாத்திரை எத்தனை நாள் நடக்கிறது? யாத்திரையில் தெய்வ பிரதிமங்கள் எங்கே செல்கின்றன? மராட்டியர்களுக்கும் பூரிக்கும் என்ன தொடர்பு?
இந்த வினாடி வினாவில் பங்கேற்கும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு விவேக் தேப்ராய் (Bibek Debroy) எழுதிய “பகவத் கீதா ஃபார் மில்லினியல்ஸ்” (Bhagavad Gita for Millennials) என்ற புத்தகம் பரிசாக வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

12. பூரி பலவிதங்களில் ஒரு புண்யக்ஷேத்ரமாகக் கருதப்படுகிறது.
ஆனால் அது ஒரு …………………. இல்லை.

11. பூரி ஜகன்னாதர் கோவில் ஒரு பெரிய வளாகத்தில் உள்ளது. இந்த வளாகத்திற்குள் எத்தனை கோவில்கள் உள்ளன?

10. சோம்நாத் போலவே பூரியும் பல முறை படையெடுப்பால் சூறையாடப்பட்டது. எத்தனை முறை?

9. மராட்டியர்கள் அருணன் ஸ்தம்பத்தை கொணர்ந்து பூரியில் ஸ்தாபித்தார்கள். இந்த ஸ்தம்பம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?

8. பூரியில் இருக்கும் ஆனந்த பஸார் எதனைக் குறிப்பிடுகிறது?

7. அனாவசாரா என்பது ரத யாத்திரைக்கு முன் 15 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஒரு நியமம். இந்த காலத்தில் தெய்வங்கள் என்ன செய்வதாக நம்பப்படுகிறது?

6. நவகளேபரா எனும் வைபவம் 8-19 வருஷத்திற்கு ஒரு முறை பூரியில் கொண்டாடப்படுகிறது. இது என்ன வைபவம்?

5. பூரி ரதயாத்திரையில் வரும் ரதங்கள் மரத்தால் செய்யப்பட்டவை. (புது ரதங்கள் செய்வதற்கு முன்) இந்த ரதங்கள் எத்தனை வருடங்கள் பயன்படுத்தப்படுகின்றன?

4. எத்தனை நாட்களுக்கு ரத யாத்திரை நடத்தப்படுகிறது?

3. குண்டீச்சா கோவில் ரதயாத்திரை முடிவடையும் இடமாகும். குண்டீச்சா என்பவர் யார்?

2. சில வருடங்கள் முன் வரை 2 செட் ரதங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. ஏன்?

1. சேரா பன்ஹாரா (Chera Panhara) ரதயாத்திரையில் ஒரு முக்கிய சடங்கு. அப்போது என்ன நடக்கும்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In