76

தாகூர் ஜெயந்தி

இன்று, மே 9, தாகூர் ஜெயந்தி. சர்வதேச அளவில் இந்தியாவின் மிகவும் போற்றப்படும் கவிஞர் அவர். நவீன இந்திய மொழிகளில் கவிதை இயற்றிய, அவருக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகளும் உள்ளனர். அவர்களின் கவிதைகள் நமது பக்தி இயக்கம், சமூக சீர்திருத்தம் மற்றும் சுதந்திர போராட்டத்தை வடிவமைத்தன. அவர்கள் தங்கள் இலக்கியப் படைப்புகளின் மூலம் மொழியின் வளர்ச்சிக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இந்த வினாடி வினா, 10 -ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய இந்தியாவின் 12 கவிஞர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

1. நர்சிங் மேத்தா மிகவும் புகழ்பெற்ற ஒரு குஜராத்தி கவிஞர். அவரது எந்த கவிதை மகாத்மா காந்தியின் மூலமாக அழியா புகழ் பெற்றது?

2. இந்தியாவின் மிகப்பெரிய சமூக இசைத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. இது எந்த கவிஞரைப் போற்றி நடத்தப்படுகிறது?

3. புனே அருகே உள்ள ஆலந்தி என்பது பண்டரிபுரம் யாத்திரையின் முதன்மையான தொடக்க இடமாகும். எந்த துறவுக்கவியின் பல்லக்கு ஆலந்தியிலிருந்து பண்டரிபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது?

4. “தமா தம் மஸ்த் கலந்தர்?” என்கிற பஞ்சாபி பாடலை பிரபலப்படுத்திய கவிஞர் யார்?

5. நேர்த்தியான பக்தி கவிதைகளை எழுத, எந்த சிறந்த வங்காள சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீனவாதி, பானுசிம்ஹா என்ற பெயரை புனைந்து கொண்டார்?

6. 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்த கவிஞர் பசவேஸ்வரா அல்லது பசவாவை தங்கள் குருவாக, ஒரு முக்கிய தென்னிந்திய சமூகம் பார்க்கிறது. அது எந்த சமூகம்?

பனாரஸ் அரசருக்கு நிதி அளித்திடும் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்தி இலக்கியத்தின் தந்தை என போற்றபடுகிறார் . யார் இவர்?

கவிஞர் வித்யாபதி கையாண்ட ஒரு சிறப்பு பாணி, ப்ராஜ்பௌலி என்ற ஒரு சிறப்பு இலக்கிய மொழியாக மாறும் அளவுக்குப் புகழ் பெற்றது. முதலில் எந்த மொழியில் அந்த சிறப்பு நடையில் இயற்றினார்?

அத்திபடி ஜகந்நாத தாஸ் ஓடியா மொழியில் எழுதிய எந்த படைப்புக்கு ராம்சரித்மானசுக்கு இணையான அந்தஸ்து உள்ளது?

ஸ்ரீமந்த சங்கர்தேவ் சத்ராஸ் எனப்படும் துறவற நிறுவனங்களின் பாரம்பரியத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனங்களை எங்கே காணலாம்?

கேரளாவைச் சேர்ந்த துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் எழுதிய ராமாயணம் இன்றும் எவ்வாறு பயன்பாட்டில் உள்ளது?

மகாகவி பாரதி தேசபக்தி, பக்தி மற்றும் சமூக சீர்திருத்தம் குறித்து கவிதைகள் எழுதினார். அவர் தனது கவிதைகளை எந்த மொழியில் இயற்றினார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In