பண்டைய ஒரிசாவில் பௌத்தம் செழித்து வளர்ந்தது, மேலும், சீனப் பயணி ஹியூன் சுவாஙஂ அங்கு ஏராளமான மடாலயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டார். புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கிற்கு அருகில் அமைந்துள்ள லலிதகிரி, கி.பி. 1-ஆம் நூற்றாண்டையும், உதயகிரி 4 மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளையும் மற்றும் இரத்தினகிரி 5 முதல் 7-ஆம் நூற்றாண்டுகளையும் சேர்ந்தவை. இவற்றின் அருகிலேயே அமைந்திருந்ததுடன் புகழ்பெற்ற புஷ்பகிரி பல்கலைக்கழகம், அதன் புகழில் நாளந்தாவிற்குப் போட்டியாக விளங்கியது.
இந்த மடாலயங்களே வஜ்ரயானத்தை (தாந்திரிக பௌத்தம்) தோற்றுவித்ததாகக் கருதப்படுகின்றன; இது பின்னர் திபெத், சிக்கிம் மற்றும் நேபாளம் முழுவதும் ஒரு முக்கிய மதமாக மாறியது. இந்த மடாலயங்கள் விதிவிலக்காக மற்ற சராசரி பௌத்தத் தலங்களைவிட மிகவும் மேம்பட்ட, அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்தவை. இவற்றின் வேலைப்பாடு, அதே கால கட்டத்தில் ஒரிசாவில் கட்டப்பட்ட எண்ணற்ற சிவன் மற்றும் சக்தி கோயில்களுடன், செதுக்கும் பாணிகள், வார்ப்புகள் மற்றும் சிற்பங்களின் நுட்பத்துடன் ஒத்து இருக்கின்றன. ஒற்றுமைகள் மிகவும் வெளிப்படையாக இருப்பதால், இந்த அனைத்துப் பிரிவு களுக்குமான கட்டமைப்புகளை ஒரே கைவினைஞர் சமூகமே கட்டியிருக்கக் கூடும் என்று வரலாற்றாசிரியர் வித்யா தேஹேஜியா குறிப்பிடுகிறார். பண்டைய ஒரிசா எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மரபுகளைப் பற்றி மட்டுமே எழுதி, ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்றாலும், கலைஞர்கள் இயல் பாகவே மதச்சார்பற்றவர்களாக இருந்து, அனைவருக்கும் தலைசிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கினர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பட உதவி: ராமானுஜம் எஸ்.ஆர்.