70

கண்ணன் பிறந்த அஷ்டமித்திருநாள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என குதூகலித்திருக்கும் நமக்கு முதலாவதாக மனதுக்கு வரும் இடங்கள் அவன் பாலகனாக லீலைகள் புரிந்த கோகுலம், த்வாரகா, மதுரா மற்றும் ப்ருந்தாவனம்தான்.ஆனால் நம் பாரத பூமியில் க்ருஷ்ணன் வாழ்ந்த , ராஸலீலைகள் புரிந்த ,போர்புரிந்த மேலும் அவர் உலகிற்கு போதனை ‌செய்த ,என்று பல ஊர்களின் மகத்துவத்தை இந்த நன்னாளில் இவ்வினாடி வினா மூலம் அறிந்து கொள்வோமா?? வாருங்கள் கண்ணனின் மயக்கும் குழலோசை தொடரும் பாதையில் சென்று மகிழ்வோம்.
இந்த வினாடி வினாவில் உள்ள ஓவியங்கள் டைனி டாட் மற்றும் சாந்தி ப்ரசுரங்கள் க்ருஷ்ணனைப்பற்றி வெளியிட்ட புத்தகங்களில் இருந்து எடுத்ததவை
கண்ணனனை பற்றி அறிவதோடல்லாமல் இதில் பங்கேற்கும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு அர்ஜுன் பாரத்வாஜ் எழுதிய அத்தியாவசிய ராமாயணம் எனும் அருமையான புத்தகம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது
நம் இன்டியாத்ரா வினாடிவினாவின் ஐந்தாவது வருடத்தை மகிழ்வுடன் கண்ணன் பாதையில் சென்று துவங்குவோமே

கண்ணன் பிறந்ததும் அவரை சுமந்துகொண்டு வசுதேவர் நடு இரவில் நதியை கடந்து அக்கரையில் இருந்த யசோதை மற்றும் நந்தனிடம் கொடுத்து விட்டார்.கண்ணனை எங்கு அழைத்துச் சென்றார்?

கோவர்த்தன மலையை தூக்கி குடையாகப்பிடித்து க்ருஷ்ணர் ஆயர்பாடிகளையும் பசுக்களையும் ஏழு நாட்கள் தோடர்ந்து பெய்த மழையிலிருந்து காப்பாற்றினார். இந்தப் சம்பவத்தில் இருந்து பெறப்பட்ட ப்ரசித்தமான உணவு எது?

குரு சன்தீபனியிடம் க்ருஷ்ணன் பலராமன் உத்தவர் மூவரும் முறைப்படி கல்வி கற்பதற்கு எந்த இடத்திற்கு அனுப்பப்பட்டார்கள்?

யாதவர்கள் குலம் தங்களுக்குள் சண்டையிட்டு அழிவதை கண்ட க்ருஷ்ணன் இவ்வுலகை ப்ரபச தீர்த்தத்தில் துறந்தார்.இந்த க்ஷேத்ரம் எந்த கடற்கரை நகரமாகும்??

இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் புனிதமானது கிர்னார் மலைகுன்று..இங்கு க்ருஷ்ணன் ஜாம்பவானுடன் 28 நாட்களுக்கு போரிட்டு எந்த ஒரு ரத்தினத்தை மீட்டார்?

ஜராசந்தனால் முற்றுகையிடப்பட்ட
க்ருஷ்ணரும் பலராமரும் அங்கிருந்து விலகி கோமாந்தகா எனும் கடலோர மலைப்ரதேசத்திற்கு சென்றார்கள்.
இன்று இப்பகுதி எவ்வாறு அறியப்படுகிறது???

மகாராஷ்டிரத்தில் அமராவதி மாவட்டத்திலுள்ள குண்டினபுராவிலிருந்து க்ருஷ்ணன் யாரைக் கடத்திச் சென்றார்?

த்ரௌபதி சுயம்வரம் எந்த பாஞ்சால தலைநகரில் நடந்தது?

க்ருஷ்ணர் பீமன் அர்ஜுனனுடன் ஜராசந்தனை கொல்ல மகதநாட்டு எந்த தலைநகரில் நுழைந்தார்கள்?

கோகுலத்தையும் பின் ப்ருந்தாவனத்தையும் விட்டு வந்தபின் க்ருஷ்ணன் பாலகனாக நந்தகோபனின் எந்த கிராமத்தில்
தன் விளையாட்டுகளை தொடர்ந்தான்?

இந்திரபரஸ்தாவை அமைக்க எந்த காட்டை க்ருஷ்ணருமம் அர்ஜுனும் எரித்து வெற்று நிலமாக மாற்றினர்

நரகாசுரனை ப்ராக்யோதிஷபுரம் என்ற இடத்தில் நாம் தீபாவளியாக கொண்டாடும் நரகசதுர்தசியன்று க்ருஷ்ணன் வதம் செய்தார். இவ்விடம் எங்கு உள்ளது??

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In