69

ராமசரிதமானஸினஂ தத்துவம் — வினாடி வினா

இன்று ஜூலை 31, ஸ்ரீ துளசிதாசரின் ஜெயந்தி. அவர் பிறந்து 528 ஆண்டுகள் ஆகின்றது. அவர் ஜெயந்தி ஆன இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போமா…ஸ்ரீ ராம சரித் மானஸ் எனும் பாடலகளை நாம் நிறைய கேட்டிருக்கிரோம்..அதன் படைப்பாளர்தான் ஸ்ரீ துளசிதாசர்.
காந்திஜி ஒருமுறை துளசிதாசரின் ராமசரிதமானஸை ‘அனைத்து பக்தி இலக்கியங்களிலும் மிகச் சிறந்த புத்தகம்’ என்று விவரித்தார். மொழியியலாளர் சர் ஜார்ஜ் கிரிஃபித் துளசிதாசரை ‘புத்தருக்குப் பிறகு மக்களின் மிகச் சிறந்த தலைவர்’ என்று பாராட்டினார்.ராமசரிதமானஸ் என்றால் ‘ராமரின் செயல்களின் அற்புதமான ஏரி’ என்று பொருள். ஸ்ரீராமரின் வரலாறு, குணம், அவர் செய்த கர்மங்கள் பற்றிய அழகான பாடல்கள்..மானஸ் என்று அன்பாக அழைக்கப்படும். இது, வடக்கில்பரவலாக பலருக்கு மிகப்புனித நூலாக விளங்குகிறது.ஸ்ரீதுளசிதாசரின் பக்தி மிகுந்த இந்த பாடல்கள் இத்துணை ப்ரபலமானது ஞாயமே.
துளசிதாசரஂ எனும் ஓரஂ தத்துவஞானி மானஸில் என்ன சொல்கிறார் என்பதை ஆராய்வோம். பவன் வர்மாவின் மகிழ்ச்சிகரமான புத்தகத்தையும் https://ramcharitmanas.info/. என்ற வலைத்தளத்தையும் எங்கள் குறிப்பாகப் பயன்படுத்துகிறோம்.
இந்த வினாடி வினாவில் பங்கேற்று பதிலஂ அளிபஂபவரஂகளில் ஐந்து அதிர்ஷடசாலிகளுக்கு
ஸ்ரீராமர் ஆசீர்வாதத்துடன் இந்த புத்தகம் பரிசாக வெல்ல வாய்ப்பு உள்ளது.
வாருங்கள் உள்ளே போவோமா.

ஒரு புனிதமான நபரின் முக்கியகுணங்களான பற்றின்மை, தன்னலமற்ற தன்மை மற்றும் வலியைத் தாங்கும் திறன், போன்றவற்றை துளசிதாசர் , நாம் நித்தம் உபயோகப்படுத்தும் எந்தப் பொருளை காட்டி விவரிக்கிறார்???

கபீரஂ தாசரைப் போலவே, துளசிதாசருமஂ சிலரை நமக்கு மிக அருகாமையிலேயே எப்பவும் வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறார். காரணம்,அப்போதுதான் அவர்கள் நம் குறைகளையும் அறியாமையையும் நமக்குக் சுட்டிக்காட்ட முடியும். இவர்கள் யார்?

துளசிதாசரின் கூற்றுப்படி, யாருடைய தாக்கத்தினால் உருவமற்ற (நிர்குண) கடவுள் , பண்புகளைக் கொண்ட (சகுண) கடவுளாக மாறுகிறார்?

கடவுளின் ஒருமையை வலியுறுத்த துளசிதாசர் வேதாந்திகளின் சமுத்திர-தரங்க நியாயத்தை (ஒப்புமை) பயன்படுத்துகிறார். இந்த ஒப்புமையின் கூறுகள் யாவை?

ராமசரிதமானஸை எழுத துளசிதாசரை எந்த தெய்வம் தூண்டியது?

துளசிதாசரஂ, புகழ்பெற்ற சிவ-சதி கதையில் சதியின் தந்தையின் உதாரணத்தை (பஂபயன்படுத்தி ) காட்டி , ஆணவத்தின் ஆபத்துகளை நிரூபிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிடவும்.

துளசிதாசரினஂ கூற்றுப்படி இறைவனின் வடிவத்தை யார் வரையறுக்க முடியும்?

வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளால் ஒருவர் ஏன் கலங்கக்கூடாது என்பதை விளக்க துளசிதாசரஂ உலகத்தை எதனுடன் ஒப்பிடுகிறார்?

துளசிதாசரினஂ கூற்றுப்படி, பிறப்பு & இறப்பு, இன்பம் & துன்பம், இழப்பு & ஆதாயம், அனைத்தும் எந்த சட்டத்தின் கீழ் நிகழ்கின்றன?

துளசிதாசரினஂ பார்வையில், ‘நான்’ & ‘என்னுடையது’ மற்றும் ‘நீ’ & ‘உன்னுடையது’ என்ற உணர்வு எந்தக் கருத்தை வரையறுக்கிறது?

ராம ராஜ்ஜியத்தில் வெற்றியின் நோக்கம் என்ன?

இந்தியாவின் தேசியப் பறவையை துளசிதாசரஂ எநஂத தீய மனிதர்களுடன் ஒப்பிடுகிறார். பறவையின் பெயரைக் கூறுங்கள்.

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In